Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2023 20:22:46 Hours

முல்லைத்தீவு தளபதி 66 வது படைப்பிரிவுக்கு விஜயம்

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் திங்கட்கிழமை (ஜனவரி 16) 66 வது காலாட் படைப்பிரிவு மற்றும் அதன் கட்டளை பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.

66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நளின் ஜயவர்தன பிரதம அதிதியை அன்புடன் வரவேற்றதுடன் 66 வது படைப் பிரிவினரால் தளபதியின் வாகன தொடர் அணிக்கு பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர், குழு படம் எடுத்தல், படைப்பிரிவு பிரிகேட் தளபதிகளின் தமது வகிப்பங்கு மற்றும் பணிகள் தொடர்பிலான விளக்கம், மாங்கன்று நாட்டல் என்பன இடம்பெற்றது.

அவர் முதலில் 66 வது காலாட் படைப்பிரிவு தலைமையதை பார்வையிட்டதுடன் படையினருக்கு உரையாற்றினார். பள்ளிக்குடா, மந்தகலாறு, பல்லவராயன்கட்டு மற்றும் சங்குப்பிட்டி வீதித் தடைகளை பார்வையிட்டார்.