Header

Sri Lanka Army

Defender of the Nation

20th January 2023 20:27:56 Hours

மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் அதிகாரிகள் டீவிஎஸ் லங்கா நிறுவனத்திடமிருந்து நிபுணத்துவம் பெறல்

மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகம் 2023 ஆம் ஆண்டிற்கான பொறியியல் அதிகாரிகளுக்கான தனது ஆரம்ப வெளிக்கள தொழில்நுட்பப் பயிற்சியை 'மோட்டார் சைக்கிள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு' என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 13) ஹொரண டீவிஎஸ் லங்கா வாகன கட்டமைத்தல் வளாகத்தில் மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் 20 அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

இது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜெயசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் டி.வி.எஸ் லங்கா நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் குறிப்பாக அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையகங்களிலும் விரைவு எதிர்நடவடிக்கை குழுக்களில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் TVS Apache RTR 200 மோட்டார் சைக்கிள்களில் மீது பராமரிப்பை நோக்கமாக கொண்டிருந்தது.

டீவிஎஸ் லங்கா நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு கீதல் அந்தோனி, உதவிப் பொது முகாமையாளர் மற்றும் சந்தைபடுத்தல் மற்றும் பட்டறை செயல்பாடுகள் திரு இந்திக புஷ்ப குமார, உதவி முகாமையளர் திருமதி தனுஜா தினலி ஆகியோருக்கு இந் நிகழ்வில் பிரதம அதிகாரியாக கலந்து கொண்ட மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பக பணிப்பாளர் நாயகம் இராணுவத்தின் இயந்திர பொறியியல் பணிப்பகத்துடன் இணைந்து இந் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக பாராட்டு மற்றும் நன்றியினை தெரிவித்தார்.