Header

Sri Lanka Army

Defender of the Nation

18th January 2023 18:40:47 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணிக்கு புதிதாக அதிகாரவாணைபெற்ற அதிகாரிகள் வரவேற்பு

கொஸ்கம இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 10) புதிதாக அதிகாரவாணைபெற்ற இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பாடநெறி இல. 61, 61 ஏ மற்றும் பெண்கள் பாடநெறி 18 இன் புதிய 95 இளம் அதிகாரிகள் வரவேற்கப்பட்டனர்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் இன் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வாவுடன் இணைந்து இளம் அதிகாரிகளை அன்புடன் வரவேற்றார்.

நிகழ்ச்சியின் போது, வளரும் அதிகாரிகளுக்கு அடிப்படை நடைமுறைகள், அடிப்படை விழுமியங்கள், பெருமைமிக்க வரலாறு மற்றும் தொண்டர் படையணியின் நீண்டகால வரலாறு குறித்துக் கற்பிக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் அவர்களின் எதிர்காலத்திற்கு வாழ்த்துக்களையும் பாராட்டுச் சின்னங்களை வழங்கினார்.