Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2023 19:30:36 Hours

பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக சிரேஷ்ட அதிகாரி பங்குபற்றல்

கோட்டே ஆனந்த சாஸ்த்ரலே கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக அதன் பழைய மாணவரும் வடக்கு முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க அவர்கள் ஜனவரி 12 கலந்துகொண்டார்.

கல்லூரிக்கு வருகை தந்த பிரதம அதிதியை கோட்டே ஆனந்த சாஸ்த்ரலே கல்லூரியின் அதிபர், ஆசிரியர்களுடன் இணைந்து அன்புடன் வரவேற்று, கல்லூரியின் மாணவ சிப்பாய் படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க வருடாந்த விளையாட்டுப் போட்டியில் சாதனையாளர்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். பின்னர் பிரதம அதிதி மாணவர்களிடையே உரையாற்றியதுடன் அவர்களிடமிருந்து விடைப் பெற்று செல்லும் முன்னர் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துறைத்தார்.