Header

Sri Lanka Army

Defender of the Nation

13th January 2023 17:58:26 Hours

51 மன்னார் மாணவர்களுக்கு இலவச பாடசாலை உதவிகள்

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ள 54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேட் படையினரின் ஒருங்கிணைப்புடன் கல்லயடி ரோ.க.த.க வித்தியாலத்தின் 26 மாணவர்களுக்கும் ரோ.க.த.க நொச்சிக்குளம் 25 மாணவர்களுக்கும் தலா ரூபா.3000.00 பெறுமதியான பாடசாலை பைகள் மற்றும் பாடசாலை உபகரணங்களை வழங்கும் சமூக நல திட்டம் கடந்த திங்கட்கிழமை (09) 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி உள்ளக விளையாட்டு அரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கான நிதி அனுசரணையை வெலிகந்த மக்கள் வங்கி திரு.டி.எஸ்.பீலிக்ஸ், திரு.ருமேஷ் உபயசிறி மற்றும் திரு.மைக்கல் உபயசிறி ஆகியோர் வழங்கினர். 541 வது காலாட் பிரிகேட் படையணினரின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந் நிகழ்ச்சிக்கு காலி ரிச்மண்ட் கல்லூரி அதிபர், பாடசாலை கல்விசார் சமூகம் மற்றும் பாடசாலை விஞ்ஞான பிரிவு மாணவர்களும் ஒத்துழைப்பு வழங்கினர்.

54 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட அவர்களின் வழிகாட்டலின் கீழ், 541 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் தசந்த முனசிங்கவின் ஆலோசனையின் பேரில், 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஏஏஎஸ் அமரதுங்க மற்றும் 10 வது (தொ) கெமுணு ஹேவா படையணி கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ. ஜி.எஸ். பண்டார நிகழ்ச்சியை மேற்பார்வையிட்டனர்.

54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், அதிபர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.