Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2023 20:12:12 Hours

கொஸ்கம இராணுவ வழங்கல் தலைமையகத்தின் 43 வது ஆண்டு பூர்த்தி

கொஸ்கம, சாலாவ இராணுவ வழங்கல் தலைமையகம் தனது 43 வது ஆண்டு நிறைவு விழாவை 2023 ஜனவரி 1 அன்று கொண்டாடியது.

ஆண்டு நிறைவு நாளுக்கு முன்னதாக, 2022 டிசம்பர் 31 அன்று கொஸ்கம ‘செந்தேசெவன முதியோர் இல்லத்தில்’ சிரமதான நிகழ்வும், புண்ணியதானம் மற்றும் பரிசுகள் வழங்கள் என்பனவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஆண்டு நிறைவு நாளில், இராணுவ வழங்கல் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் இந்துசமரக்கோன் அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. இராணுவ வழங்கல் தலைமையக தளபதி பின்னர் அனைத்து நிலையினருக்கான மதிய உணவில் கலந்துகொள்வதற்கு முன் படையினருக்கு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.