Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2023 20:32:58 Hours

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு படைத் தலைமையகங்கள் மற்றும் இராணுவ அமைப்புகளில் சம்பிரதாயங்களுக்கமைய புத்தாண்டு நிகழ்வுகள்

2023 புதுவருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதும் பணியாற்றும் படையினர் திங்கட்கிழமை (2) இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய அரச சத்திய பிரமாணம் மற்றும் இராணுவ தளபதியின் செய்தி வாசிப்பு உட்பட ஏனைய நிகழ்வுகளுடன் பணியை ஆரம்பித்தனர்.

அதற்கமைய யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் புத்தாண்டில் கடமைகளைத் தொடங்குவதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்திருந்ததுடன், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். தேசிய கீதம் இசைப்பதற்கு முன் தேசியக் கொடியும் இராணுவக் கொடியும் ஏற்றப்பட்டதுடன் இராணுவ கீதமும் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து, உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும், அரச பிரமாணம் வாசிப்பும், தளபதியின் செய்தி வாசிப்புடன் நிகழ்வு நிறைவுற்றது.

இந் நிகழ்வில் தளபதியின் திட்டத்திற்கு இணங்க யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் சேவையாற்றும் 30 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுபொதிகள் பரிசாக வழங்கப்பட்டன.

அதற்கமைய, புத்தாண்டை வரவேற்கும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (1) மத அனுஷ்டானங்கள் மற்றும் மகா சங்க உறுப்பினர்களுக்கு அன்னதானம் வழங்குதலும் இடம் பெற்றது.

இந்த வழிபாடுகளின் போது, கெபிதிகொல்லேவ 'குணசிங்க ஆரண்ய சேனாசனாய' பௌத்த பிக்குகளால் வீரமரணம் அடைந்த போர்வீரர்களுக்கு முத்தி வேண்டியும் இராணுவத்திற்கும் நாட்டிற்கும் ஆசீர்வாதம் வேண்டியும் பூஜைகள் நடாத்தப்பட்டன.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் புத்தாண்டு நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அதேபோன்று, 55 வது காலாட் படைபிரிவு மற்றும் 553 வது காலாட் பிரிகேட்டின் ஏற்பாட்டில் இதேபோன்று புத்தாண்டு ஆசீர்வாத நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் உள்ள புராதன நாகர் கோவிலில் இடம்பெற்றது.

55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் கோரிக்கைக்கமைய 553 வது பிரிகேட் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின்படி, இவ் ஆசீர்வாத நிகழ்வு 553 காலாட் பிரிகேட் படையினரால் நடத்தப்பட்டதுடன், 30 வறிய குடும்பங்களுக்கு அமெரிக்காவில் வசிக்கும் திருமதி அனயா கொஸ்வத்த அவர்களின் உதவியுடன் தலா ரூபா: 10,000.00 பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் 55 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, 553 வது பிரிகேட் தளபதி கேணல் ஜனக் பிரேமதிலக, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி, சிரேஷ்ட அதிகாரிகள், படையினர் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்துகொண்டனர்.

அதே நாளில் (1), மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினரால் 2023 புத்தாண்டை ஆரம்பிக்கும் முகமாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல அவர்களால் தேசிய கொடியும் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் அசேல அமரசேகர அவர்களால் இராணுவ கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் தேசிய கீதம் மற்றும் இராணுவப் கீதம் பாடப்பட்டது.

சில நிமிடங்களுக்குப் பின்னர், சத்திய பிரமாணம் வாசிக்கப்படுவதற்கு முன்னர், உயிரிழந்த போர்வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், மேற்குத் தளபதி படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்னர், இராணுவ தளபதியின் புத்தாண்டு செய்தி அனைவருக்கும் வாசிக்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியாக, இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதியின் முயற்சியால் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பணிபுரியும் 39 சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

அதற்கமைய புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 66 வது காலாட் படைபிரிவின் படையினரால், அரசபுரக்குளம் குளத்தை சுற்றி மரநடுகை திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (1) ஆரம்பித்து வைத்தனர்.

இத் திட்டத்தில் 50 மகோகனி மரக்கன்றுகளும் 50 மருதம் மரக்கன்றுகளும் நடப்பட்டன. 66 வது காலாட் படைபிரிவின் தளபதி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரிகேடியர் நளின் ஜயவர்தன அவர்களினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் 661 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நளின் செனவிரத்ன, லெப்டினன்ட் கேணல் டி.ஜி.ஜே.பி.பி தெமட்டகஹவத்த, 5 வது (தொ) இலங்கை இயந்திரவியல் காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, அரசபுரக்குளம் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு கே.திலக்ஷன், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்து கொண்டனர்.