Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd January 2023 07:41:31 Hours

வன்னி படையினரால் இரு நவீன தொழிநுட்ப வகுப்பறைகள் நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது காலாட் படைப்பிரிவின் 14 வது (தொ) இலங்கை இலோசாயுத காலாட் படையணி மற்றும் பொறியியல் சேவைப் படையணி படையினர் தெரண தொலைக்காட்சியின் 'மனுசத் தெரண' திட்டத்தின் அனுசரணையுடன் வெலிஓயா கிரிஇப்பன்வெவ மகா வித்தியாலயம் மற்றும் வெலிஓயா எதாவெடுனுவெவ மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டு நவீன தொழிநுட்ப வகுப்பறைகளை மாணவர்கள் பாவனைக்கு புதன்கிழமை (டிசம்பர் 28) கையளிக்கப்பட்டது.

இந்த நவீன தொழிநுட்ப வகுப்பறைகளின் நிர்மாணப்பணியானது வன்னி இராணுவப் படையினர் அனுசரணையாளர்களுக்குச் சிக்கனமானதும் நம்பகத்தன்மையுடையதுமான செயற்திட்டத்தை மேற்கொள்ள வேண்டுமென தெரண தொலைக்காட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க மற்றும் 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜானக ரணசிங்க அவர்கள் இரு வகுப்பறைகளிலும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடநெறி பயி்ல்வதற்கு அவசியமான மின்னணு சாதனங்கள் மற்றும் உபகரணங்களை பொருத்தி நிர்மாணிப்பினை நிறைவு செய்வதற்கு அறிவுறுத்தினர்.

புதன்கிழமை (டிசம்பர் 28) 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, ‘மனுசத் தெரண’ திட்டத் தலைவர், திரு. மகேஷ் ஜயவர்தன மற்றும் அவரது குழுவினர் 621 மற்றும் 622 வது காலாட் பிரிகேட் தளபதிகள், அதிபர்கள், 62 வது காலாட் படைபிரிவின் சிவில் விவகார இணைப்பாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ஆகியோர் கிரிஇப்பன்வெவ மகா வித்தியாலயம் மற்றும் எதாவெடுனுவெவ மகா வித்தியாலயம் ஆகிய இரு நவீன தொழிநுட்ப வகுப்பறைகளின் சம்பிரதாய திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.