Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2022 19:34:26 Hours

யாழ். படையினரால் பருத்திதுறையில் நத்தார் கரோல் நிகழ்வு

வடமராட்சி கத்தோலிக்க தேவாலய பங்குத்தந்தையின் ஒத்துழைப்புடன் பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) மாலை நத்தார் கரோல் நிகழ்வுகள் யாழ். படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டன.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், 551 வது பிரிகேட் தளபதி கேணல் ஜூட் காரியகரவன அவர்களின் மேற்பார்வையுடன் 551 வது பிரிகேட் படையினரால் வண்ணமயமான நத்தார் கரோல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபட்டன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக 55 வது காலாட்படைபிரிவின் தளபதி கலந்துகொண்டதுடன், நிகழ்வின் கௌரவ அதிதியாக யாழ் மறை மாவட்ட ஆயர் வண. அருட்தந்தை பி.ஜே.ஜெபரத்தினம் அவர்கள் கலந்துகொண்டார்.

வண. அருட்தந்தை மைக்கல் மற்றும் மணற்காடு சகோதரிகள் மணக்காடு தேவாலய பாடகர் குழு, சாக்கோட்டை இளைஞர் பாடகர் குழு, புனித தோமஸ் பெண்கள் கல்லூரி நடனக் குழு, புனித தோமஸ் தேவாலய பாடகர் குழு, மெதடிஸ்ட் தேவாலய நடனக் குழு, கரவெட்டி தேவாலயத்தின் நடனக் குழு, மற்றும் புனித மேரிஸ் தேவாலயத்தின் பாடகர்கள் நிகழ்வை வண்ணமயமாக்கினர்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன மற்றும் வணக்கத்திற்குரிய அருட்தந்தை பி.ஜே.ஜெபரத்தினம் ஆகியோர் பாடகர் குழுவில் பாடிய இளைஞர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கினர்.

552 மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதிகள், படைப்பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், பருத்தித்துறை முன்னாள் மேயர் ஜோசப் இருதயராஜா, பருத்தித்துறை பிரதேச சபையின் தலைவர் சார்ல்ஸ் ஆரியரத்தினம் ஆரியகுமார், பிரதேச செயலாளர் பருத்தித்துறை திரு அல்வாய்ப்பிள்ளை சிறீனல், வடமராட்சி கல்விப் பணிப்பாளர் கே.சத்தியபாலன், பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர், பருத்தித்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகர், வடமராட்சி பிரதேசத்தின் அருட்தந்தைகள் மற்றும் சகோதரிகள், பிரதேசத்தின் ஏனைய மத பிரதிநிதிகள், பெற்றோர்கள் மற்றும் பருத்தித்துறை கிறிஸ்தவர்கள் பலர் இந்நிகழ்வின் கலந்துகொண்டனர்.