Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2022 19:40:26 Hours

முல்லைத்தீவு படையினர் நத்தார் பண்டிகைக்கு முன்னதாக தேவாலய வளாகங்கள் சுத்தம் செய்யும் பணியில்

முல்லைத்தீவு 64 வது காலாட் படைபிரிவின் படையினர் நத்தார் பண்டிகை தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 23) நள்ளிரவு பிரார்த்தனைக்கு முன்னதாக தேவாலய வளாகங்களையும் அதன் சுற்றுப்புறங்களையும் முழுமையாக சுத்தம் செய்யும் பணிகளை மேற் கொண்டதுடன், பல தேவாலயங்களில் நத்தார் பண்டிகைக்கான ஆராதனைகளை நடத்துவதற்கு தமது ஆதரவை வழங்கினர்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர அவர்கள் இந்த வேலைத்திட்டங்களை மேற்கொள்ளுமாறு தனது படையினருக்கு பணிப்புரை வழங்கினார். அதன்படி, 64 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க எரியகம அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 641 வது காலாட் பிரிகேட் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் எச்எம்பிசி ஹேரத் மற்றும் 14 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஆர்எம்என்எல் ராஜநாயக்க ஆகியோர்களின் மேற்பார்வையில் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினர் கூழாம்முறிப்பு புனித ஜோசப் தேவாலயத்தை சுத்தம் செய்யும் பணிகளை மேற் கொண்டனர்.

17 வது இலங்கை கஜபா படையினர் தண்டுவான் மெதடிஸ் தேவாலயத்தை 642 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் மேதன்கா அல்விஸ் அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய, 17 (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஎச்எம்எஸ்சி அபேசிங்க அவர்களின் மேற்பார்வையில் கீழ் துப்புரவு பணி முன்னெடுத்தனர்.

அதற்கமைய, 59 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ரணசிங்க மற்றும் 593 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் சிந்தக விஜேநாயக்க ஆகியோர்களின் வழிகாட்டுதலின் கீ்ழ் 19 வது இலங்கை கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினர் நந்திக்கடலில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் குப்பைகளை அகற்றி சுத்தப்படுத்தும் நடவடிக்கை மேற் கொண்டனர்.

19 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் யுகேடிஎல்கே உடுகம மற்றும் 5 வது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எம்பி ஹெட்டியாராச்சி ஆகியோரின் மேற்பார்வையில் இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.