Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2022 23:00:17 Hours

தேசிய தொழிற்கல்வித் தகுதிபெற்ற இராணுவத்தினருக்கு சான்றிதழ் வழங்கலும் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு புலமைபரிசில் வழங்கலும்

ரணவிரு வள மையத்தில் பல்வேறு தொழில்நுட்ப பாடநெறிகளைப் பின்பற்றி சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்கல்வித் தகுதி நிலை 4 மற்றும் 3 இல் வெற்றிகரமாகத் தகுதி பெற்ற 30 இராணுவ வீரர்களுக்கான இறுதிச் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (27) பிற்பகல் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் சாதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இப் பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதில் இராணுவக் குடும்பங்களின் திறமையான பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன.

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எஸ்சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ மற்றும் நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்பீஏஆர்பீ ராஜபக்ஷ ஆர்எஸ்பீ ஆகியோர் இணைந்து பிரதம அதிதியான இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை வரவேற்றனர்.

நில அலங்கார பாடநெறி, கையடக்க தொலைபேசி பழுதுபார்த்தல் பாடநெறி, தச்சு வேலை (கட்டிடம்) பாடநெறி , கணினி பயன்பாட்டு உதவியாளர் பாடநெறி, மின் சாதனம் தொழில்நுட்பவியலாளர் பாடநெறி, அலுமினியம் ஒட்டு பாடநெறி, கணினி வன்பொருள் பாடநெறி, முடி மற்றும் அழகு கலை பாடநெறி மற்றும் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் பழுதுபார்தல் பாடநெறிகள் போன்ற உள்ளிட்ட பல தொழில்நுட்ப பாடநெறிகளை கற்பிப்பதுடன் ஹெகித்தவில் உள்ள இராணுவத்தால் நடத்தப்படும் ரணவிரு வள மையத்தின் பயன்பாட்டின் வீடியோ ஔிப்பரப்பட்டது.

அறிமுக உரையின் பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டபில்யுபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கேஏ லலிததீர ஆகியோருடன் இணைந்து தேசிய தொழிற்கல்வித் தகுதியில் தரம் 4 மற்றும் 3 தகுதிகள் பெற்ற 30 இராணுவத்தினருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இராணுவத்தில் சேவையில் உள்ள மாற்றுத்திறனாளிகள், இராணுவத்தின் ஓய்வு பெறவுள்ளவர்கள், ஓய்வு பெற்ற இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் மாற்றுத் தொழில்களில் தகுதி பெற விரும்புபவர்கள் ஆகியோரின் தொழில்நுட்ப தகுதிகளை மேலும் மேம்படுத்துவதற்காக, இலங்கையின் தொழிற்பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து 2013 இல் ரணவிரு வள மையம் நிறுவப்பட்டது.

ரணவிரு வள மையத்தில் விரிவுரைகள் கோட்பாட்டு மற்றும் நடைமுறை அம்சங்களை உள்ளடக்கிய தொழில் பயிற்சி அதிகார சபையுடன் இணைந்து நன்கு தகுதி வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களால் நடத்தப்படுகின்றன. அனைத்து தகுதித் தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் கல்வித் துறையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி அதிகார சபையினால் நடத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகின்றன.

2013 முதல், 1963 முப்படைகளின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், இலங்கை பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஊழியர்கள் வெற்றிகரமாக பாடநெறிகளைப் பின்பற்றி, தேசிய தொழிற்கல்வித் தகுதி தரம் 3 மற்றும் 4 ஐப் பெற்றுள்ளனர், இது அவர்களின் வெளிநாட்டு பணிகளுக்கு கூட வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடதக்கதாகும்.

அதே நிகழ்வில் இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகம், பல்கலைக்கழகம் மற்றும் உயர்கல்விக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் சமீபத்திய சாதாரண, உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறு பெற்ற இராணுவக் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் வழங்கப்பட்டன. அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கி, டயலொக் மற்றும் இராணுவ தலைமையகத்தில் உள்ள நலன்புரி பணிப்பகம் இணைந்து இந்த திட்டத்திற்கு தங்கள் அனுசரணையை வழங்கின.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவத் பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய ஆர்டபில்யுபீ ஆர்எஸ்பீ என்டியு ஆகியோர் இணைந்து வருடத்திற்கு தலா 120,000.00 வீதம் 8 புலமைப்பரிசில்களை வழங்கினர். மேலும், டயலொக்கின் அனுசரணையில் அதே நிகழ்ச்சித்திட்டத்தின் போது ஆய்வுகளுக்கு உதவக்கூடிய 23 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்களும் வழங்கப்பட்டன. அவர்களில் 5 பேருக்கு இந்த நிகழ்வின் போது அடையாளமாக வழங்கப்பட்டது.

நடவடிக்கைகளின் இறுதியாக, இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.ஏ.லலிததீர மற்றும் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் திரு எல்.ஐ.ரணசிங்க ஆகியோருக்கு இராணுவத் தளபதி பாராட்டு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

இறுதியாக, ரணவிரு வள மையத்தின் தளபதி பிரிகேடியர் டிசிசிசிஆர் வைத்தியசேகர ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பயனாளிகள், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.