Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2022 17:37:41 Hours

இராணுவ போர் கல்லூரி முதல் மாநாடு நிறைவு

இராணுவப் போர்க் கல்லூரியின் தனது முதல் மாநாடனது லெப்டினன் கேணல் பதவிகளில் உள்ள படையலகுகளின் கட்டளை அதிகாரிகளுக்கான 'சிவில்-இராணுவ உறவுகள் மற்றும் இராணுவ நிபுணத்துவம்' என்ற கருப்பொருளின் கீழ் வெற்றிகரமாக முடித்தது.

இம் மாநாடனது நிகழ்நிலை தளம் வழியாக 2022 டிசம்பர் 15 முதல் 16 ம் திகதி வரை இடம் பெற்றதுடன் குறிப்பிட்ட பாடப் பகுதிகள் தொடர்பான அறிவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இரண்டு நாள் கருத்தரங்கில் நாடு முழுவதும் உள்ள 200 வெவ்வேறு இடங்களில் பணியாற்றும் 400க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் மாநாட்டின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டல்களையும் வளங்களையும் வழங்கினார்.

இம்மாநாட்டின் ஆரம்பத்தில், இராணுவ போர் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் மனதா யஹம்பத் அனைத்து பங்கேற்பாளர்களையும் அன்புடன் வரவேற்றார், மேலும் சிவில்-இராணுவ உறவுகளை மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் தற்போதைய பாதுகாப்பு சூழல் தொடர்பாக இலங்கை இராணுவத்தின் பொது பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இராணுவ போர் கல்லூரியின் மாநாட்டின் முதல் நாள், 'சிவில்-இராணுவ உறவுகளின் கருத்தியல் மற்றும் தத்துவார்த்த முன்னோக்குகள்' மற்றும் சிக்கலான பாதுகாப்பு நிலப்பரப்பில் சிவில்-இராணுவ உறவுகளின் இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் குறைத்தல்' ஆகிய தலைப்புகளில் இரண்டு அமர்வுகளை உள்ளடக்கி இடம் பெற்றதுடன், கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் (திருமதி) மனீஷா எஸ். வனசிங்க பாஸ்குவேல் தலைமையில் இடம்பெற்ற முதலாவது அமர்வில் இலங்கை இராணுவப் பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கபில தொலகே, ஸ்ரீ பாலி வளாகத்தின் பேராசிரியர் பிரதிபா மஹானாம ஹேவா, ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆரம்ப மேலதிக உரையை வழங்குவதற்கு மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே முதலாம் நாளின் பிற்பகல் அமர்வுக்கு தலைமை தாங்கினார். இரண்டாவது அமர்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி சனத் டி சில்வா மற்றும் பசுமை வேளாண்மை பணிப்பகத்தின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் சந்தன அரங்கல்ல, ஆகியோர் அதிதி விரிவுரையாளர்களாக கலந்து கொண்டு போது தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிபுணர்களின் கூட்டம் ஏனைய நடவடிக்கைகளில் ஒன்றிணைந்தனர்.