Header

Sri Lanka Army

Defender of the Nation

19th December 2022 18:20:55 Hours

66 வது படைப்பிரிவின் புதிய தளபதி தனது முதல் அதிகாரப்பூர்வ விஜயம்

பூநகரி 66 வது படைப்பிரிவிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தளபதி பிரிகேடியர் நளின் ஜயவர்தன அவர்கள் தனது புதிய பதவியை பொறுப்பேற்ற பின்னர் டிசம்பர் 9-13 ம் திகதிகளில் தனது கட்டளையின் கீழ் உள்ள பிரிகேட் மற்றும் படையலகுகளுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

இவ் விஜயத்தின் போது, அவர் 662 மற்றும் 663 வது பிரிகேட், 11 (தொ) கஜபா படையணி, 20 (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 2 (தொ) இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

ஒவ்வொரு விஜயத்தின் போதும், பிரிகேட் தளபதிகள் மற்றும் அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகள், வருகை தந்த தளபதிக்கு அவர்களின் தற்போதைய வகிபங்கு மற்றும் பணிகள் தொடர்பாக அவருக்கு விளக்கமளித்தனர். அங்கு படையினருக்கு உரையாற்றிய போது தனது எதிர்பார்ப்பு தொடர்பில் கருத்து தெரிவித்தார்.