Header

Sri Lanka Army

Defender of the Nation

20th December 2022 17:45:20 Hours

ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் கரவெட்டி பெண்ணுக்கு வீடு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 55 வது படைப்பிரிவின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் நன்கொடையாளர் ஒருவரின் அனுசரணையுடன் 551 வது காலாட் பிரிகேட் படையினர் கரவெட்டி துன்னாலையில் (தெற்கு) வசிக்கும் குடும்பத்திற்கு புதிய வீட்டை நிர்மாணிக்க உதவியதுடன் டிசம்பர் 16 ஆம் திகதி பிரதம அதிதியாக 55 காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன அவர்களின் முன்னிலையில் அவ் வீடு பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் திருமதி செல்வரட்ணம் ஜெயப்பிரதா என்பவரே படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய இல்லத்தின் உரிமையளாராவார். கனடாவில் வாழும் தமிழர் திருச்சபையால் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) ஒருங்கிணைத்தார்.

551 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சிந்தக விக்கிரமசிங்கவின் மேற்பார்வையின் 16 வது இலேசாயுத காலாட் படையணி படையினரால் நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் வழங்கப்பட்டது.

அன்றைய நிகழ்வின் அடையாளமாக பிரதம அதிதியால் சாவிகள் கையளிக்கப்பட்டதுடன், பயனாளிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கலுடன் விழா நிறைவுற்றது.

நிகழ்வில் 551, 552 மற்றும் 553 வது காலாட் பிரிகேட் தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், திரு என் ஜெகநாதன், கரவெட்டி பிரதேச சபையின் உப தலைவர் கந்தீர் பொன்னையா, கரவெட்டி பிரதேச செயலாளர் திரு இ தியரூபன், அரச அதிகாரிகள், ஏனைய அழைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.