Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2022 19:35:00 Hours

61 வது படைப்பிரிவின் புதிய தளபதியின் உத்தியோகபூர்வ விஜயம்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 61 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்கள் 611 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுஜீவ அரகொட அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 07) கேகாலை பெரகலையில் அமைந்துள்ள 611 வது காலாட் பிரிகேட் மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணிக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

தளபதியினை 611 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணி கட்டளை அதிகாரி மேஜர் ஏ.ஏ ஏகநாயக்க ஆகியோர் அன்புடன் வரவேற்றதுடன் மற்றும் 8 வது இலங்கை சிங்க படையணி படையினரால் தளபதியின் வாகன தொடரணிக்கு மரியாதையும் வழங்கப்பட்டது.

அத்தினத்தின் நினைவாக வளாகத்தில் மரக்கன்று நடுவதற்கு தளபதி அழைக்கப்பட்டதினை தொடர்ந்து பிரிகேட் பணிநிலை அதிகாரிகள் மற்றும் 8 வது சிங்க படையணி கட்டளை அதிகாரியால் விரிவான விரிவுரையளிக்கப்பட்டது.

தொடர்ந்து தளபதி பிரிகேட் வளாகம் மற்றும் 8 வது சிங்க படையணி வளாகத்தினை பார்வையிட்டதுடன் அதிகாரிகளின் உணவகத்தில் தேநீர் விருந்துபசாரத்துடன் தொடர் நிகழ்வு நிறைவுற்றது. 8 வது கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரியான மேஜர் எச்.எம்.ஆர் ஹென்நாயக்க அவர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.