Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2022 19:36:10 Hours

பொறியியல் படைப்பிரிவின் தளபதி தர்மபால கல்லூரியின் 82 வது ஸ்தாபகதினத்தில் கலந்து சிறப்பிப்பு

பன்னிபிட்டிய தர்மபால கல்லூரியின் 82 வது ஸ்தாபக தின விழாவில் அதிபர் திருமதி மஹேஷிகா ரூபசிங்கவின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லங்கா அமரபால அவர்கள் கலந்துகொண்டார்.

அன்றைய பிரதம விருந்தினரை கல்லூரியின் மாணவப் படையணி சிப்பாய்களால் மரியாதை செலுத்தி கௌரவிக்கப்படுவதற்கு முன்னர் ஸ்தாபக தந்தை வண. அனகாரிக தர்மபால சிலைக்கு மலர் மாலை அணிவித்து கௌரவ வணக்கம் செலுத்தினார்.

அதன்பிறகு, கல்லூரி மாணவத் தலைவர்கள் மற்றும் சிரேஸ்ட மாணவர்களுக்கு 'சிறந்த தலைமைத்துவத்திற்கான முன்னோடி எதிர்கால தலைமுறை' என்ற தலைப்பில் உரையாற்ற அன்றைய பிரதம விருந்தினர் அழைக்கப்பட்டார். மேஜர் ஜெனரல் லங்கா அமரபால தனது உரையில், அனைத்து மாணவத் தலைவர்களுக்கும் சிரேஷ்ட மாணவர்களுக்கும் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு, குறிப்பாக போதைப்பொருள் போன்றவற்றுக்கு முகங்கொடுக்கும் வகையில் தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார்.

உரையின் இறுதியில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக அன்றைய நாயகனுக்கு பாராட்டு நினைவுப் பரிசை அதிபர் வழங்கினார். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் (நிர்வாகம்) மற்றும் செய்தித் தொடர்பாளர் திரு. சந்தன ஏக்கநாயக்க மற்றும் பழைய மாணவர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இருந்தனர்.

நன்றியுரையை உப அதிபர் திரு நிமல் வாசல ஆற்றினார். கல்விசார் உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.