Header

Sri Lanka Army

Defender of the Nation

18th December 2022 08:43:49 Hours

இராணுவ கல்வியற் கல்லூரியின் புதிய பயிலிளவல் அதிகாரிகளின் விடுகை அணிவகுப்பு

தியத்தலாவில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் மிகவும் மதிப்புமிக்க கல்லூரியான இராணுவ கல்வியற் கல்லூரியினால் இலங்கை இராணுவத்திற்கு மேலும் 352 பரிபூரணமாண பயிலிளவல் அதிகாரிகளை சனிக்கிழமை (17) பரிசளித்து இலங்கை அன்னையை கௌரவித்தது. இந்த புதிய அதிகாரிகள் அறிவு, திறன்கள் மற்றும் மனோபாவங்களைக் கொண்ட தந்திரோபாய மட்ட தலைவர்களாக, எதிர்காலத்தில் செயல்பாட்டு மற்றும் மூலோபாய அளவிலான பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான வாழ்நாள் முன்னேற்றத்திற்கான சிறந்த அடித்தளத்துடன் உள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 89, 91, 91 பி, குறுகிய பாடநெறி 19, பெண் பயிலிளவல் பாடநெறி 19, 61 (தொ) , 61 (ஏ) மற்றும் பெண் பயிலிளவல் 18 (தொ) ஆகியவற்றின் மாலைத்தீவு மற்றும் சாம்பியாவின் மூன்று வெளிநாட்டு பயிலிளவல் அதிகாரிகள் உட்பட மொத்தமாக 352 பயிலிளவல் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பில் இணைந்துகொண்டனர். அவர்களுக்கு கௌரவ வாளினை ஜனாதிபதி வழங்கினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித பண்டார தென்னகோன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் திரு சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, பாதுகாப்பு ஆலோசகர்கள்/இணைப்பாளர்கள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு செயலாளரின் பாரியார் திருமதி சித்ராணி குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியின் பாரியார் திருமதி சுஜீவா நெல்சன், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே உட்பட சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்க்கைத் துணைவியர்கள், பெற்றோர்கள் மற்றும் பயிலிளவல் அதிகாரிகளின் உறவினர்கள் என்போர் இவ் 97 வது விடுகை அணிவகுப்பில் இணைந்திருந்தனர்.

முதல் நிகழ்வாக ஒரு குதிரைப்படை தலைமையிலான ஊர்வலம் பிரதம அதிதியை இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு சதுக்கத்திற்கு அழைத்து வந்தது. இராணுவ மரபுகளுக்கு இணங்க, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் படையினர் முதலில் அன்றைய பிரதம அதிதியான கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை வழங்கினர்.

பின்னர், அன்றைய பிரதம அதிதியும் விருந்தினர்களும் இணைந்து உயிரிழந்த போர் வீரர்களின் விலைமதிப்பற்ற கடந்த கால தியாகங்களை மறக்காமல், அன்றைய நிகழ்ச்சி நிரலின் முதல் அம்சமாக அணிவகுப்பு மைதானத்தை அமைந்துள்ள இராணுவ கல்வியற் கல்லூரியின் போர் நினைவுச் தூபியில் மலர் அஞ்சலி மற்றும் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர். இராணுவ கல்வியற் கல்லூரியின் அணிவகுப்பு மைதானம், அன்றைய தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு ஏற்றவாறு பின்னணியில் பல வண்ண இராணுவக் கொடிகளுடன் அற்புதமாக காட்சியளிக்கப்பட்டது. அணிவகுப்பு தளபதியான இலங்கை இலேசாயுத காலாட்படையணியின் மேஜர் ஆர்.ஏ.ஏ.ரணவக்க அவர்கள் நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு, விசேட மேடையில் அன்றைய பிரதம அதிதியிடம் முறையான அனுமதி கோரினார்.

அணிவகுப்பின் முறையான பரிசீலனைக்குப் பிறகு, பிரதம அதிதி புதிய அதிகாரிகளிடமிருந்து கௌரவ மரியாதையினை பெறுவதற்கு முன்னர் அவர்களின் மிகவும் போற்றப்பட்ட அதிகாரத்தை அடையாளப்படுத்தும் வகையில், பயிலிளவல் அதிகாரிகளுக்கு மிகவும் விலையுயர்ந்த ஜனாதிபதியின் அதிகாரவாணை வாள்களை வழங்கினார். தொடர்ந்து அன்றைய பிரதம அதிதி தனித்தனியாக சிறந்த சாதனையாளர்களுக்கு சிறப்பு விருதுகளையும் வழங்கினார்.

அங்கு கௌரவ ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரையில் பயிற்சியின் இன்று புதிய வாழ்க்கையைத் தொடங்கும் வேளையில், எப்பொழுதும் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களையும் இராணுவத்தினரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் இலங்கைக் குடியரசையும் அதன் அரசியலமைப்பையும் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்றும் கூறினார்.

அன்றைய சிறப்பு விருந்தினர்களுக்கு உற்சாகத்தை அளித்து, புதிதாக அதிகாரவாணை பெற்ற அதிகாரிகள் புகழ்பெற்ற 'மகர தோரணத்தின்' படிகள் இராணுவ கல்வியற் கல்லூரியின் நிறைவேற்று அதிகாரிக்கு மரியாதை செலுத்தியவாறு அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மைதானத்தில் பாகாப்புப் வீரர்கள் அதைத் தொடர்ந்து விடைப்பெற்றனர்.

சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில்,இராணுவ கல்வியற் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்களுடன் இணைந்து அன்றைய விருந்தினர்கள் வீரமிகு இளம் அதிகாரிகளின் தோள்களில் ஜனாதிபதி அதிகாரவாணையின் அடையாளம் அணிவிக்கப்பட்டது. புதிய அதிகாரிகளின் அன்பானவர்களுக்காக, இதுவரை பயிற்சிக் காலத்தில் அவர்களை மிகவும் தவறவிட்டவர்களுக்கு நித்திய நினைவுகளால் நிரப்பப்பட்ட மகிழ்ச்சியின் தருணம் இது.

விருது பெற்றவர்கள் விபரம் வருமாறு:

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 91 - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலிடம் – பயிலிளவல் அதிகாரி ஏ.ஜீ.சி.ஜீ மதுஷாந்த

வாள் கௌரவம் – படையலகு அதிகாரி எம்.ஆர் சிதார

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 91 பீ - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலிடம் – குழுத்தலைவர் யூ.டீ.என்.என். ரோட்ரீகோ

வாள் கௌரவம் - குழுத்தலைவர் யூ.டீ.என்.என். ரோட்ரீகோ

அதிகார பிரம்பு கௌரவம் – குழுத்தலைவர் எம் அகமத்

பயிலிளவல் அதிகாரி பாடநெறி குறுகிய பாடநெறி 19 - நிரந்தர படை

தகுதி வரிசையில் முதலிடம் – குழுத்தலைவர் கே.கே.எஸ்.எஸ். தெவ்மின

பெண் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 19

தகுதி வரிசையில் முதலிடம் – குழுத்தலைவர் கே எம் டீ பீ பண்டார

வாள் கௌரவம் – குழுத்தலைவர் கே எம் டீ பீ பண்டார

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 61 (தொண்டர் படையணி)

தகுதி வரிசையில் முதலிடம் – குழுத்தலைவர் டி கே டீ பண்டார

வாள் கௌரவம் - குழுத்தலைவர் டி கே டீ பண்டார

பயிலிளவல் அதிகாரி பாடநெறி 61 ஏ (தொண்டர் படையணி)

தகுதி வரிசையில் முதலிடம் – பயிலிளவல் சார்ஜன் ஆர்.எம் ஜானக

வாள் கௌரவம் - பயிலிளவல் சார்ஜன் ஆர்.எம் ஜானக

பெண் பயிலிளவல் அதிகாரி பாடநெறி 18 – தொண்டர் படையணி

தகுதி வரிசையில் முதலிடம் – குழுத்தலைவர் ஈ.ஏ.ஏ.டீ எதிரிசிங்ஹ