Header

Sri Lanka Army

Defender of the Nation

16th December 2022 19:34:54 Hours

பிரித்தானிய இராணுவ பிரதிநிதிகள் பெண் அதிகாரிகளை சந்திப்பு

பெண் சிப்பாய்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் பிரித்தானிய இராணுவப் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த வியாழக்கிழமை (08) பொரளையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்திற்கு விஜயமென்றினை மேற்கொண்டனர்.

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் சமிந்த திப்பொட்டுகே அவர்களுடன் இலங்கை சமிஞ்சை படையணி, பொறியியல் சேவைப் படையணி, இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி, இராணுவ புலனாய்வு படையணி, இராணுவப் பொதுச் சேவைப் படையணி மற்றும் இராணுவ மகளிர் படையணியின் அதிகாரிகள் குழு இந்த சிநேகபூர்வ கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இக்கலந்துரையடல் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டங்களில் பெண் சிப்பாய்கள் எதிர்கொள்ளும் பிரச்சனையான சூழ்நிலைகள் குறித்து தூதுக்குழுவினரால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது.

இராணுவ மகளிர் படையணியின் கடமைகள் பற்றிய விரிவான விளக்கம் தூதுக்குழுவிடம் முன்வைக்கப்பட்டதுடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சினேகபூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றது.