Header

Sri Lanka Army

Defender of the Nation

13th December 2022 18:17:29 Hours

‘லூதர் மாதா முதியோர் இல்லத்திற்கு 58 வது படைப் பிரிவினரால் விருந்தோம்பல்

புத்தளத்தில் உள்ள 58 வது படைப்பிரிவு தலைமையகத்திற்கு தனது இறுதி உத்தியோகபூர்வ விஜயத்தினை திங்கட்கிழமை (12) மேற்கொண்ட முதலாவது படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் கிருஷாந்த ஞானரத்ன அவர்கள் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர் பள்ளியாவத்தை கலாஓயாவில் உள்ள 'லூதர் மாதா முதியோர்' இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு சுவையான மதிய உணவை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். இத் திட்டமானது 58 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் விபுல இஹலகே அவர்களின் பணிப்புரையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது.

விருந்தின் முடிவில், ஒவ்வொரு முதியவருக்கும் 58 வது படைப்பிரிவு படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.