Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2022 15:05:41 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு புதிய வீடு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர் அனைத்து மட்டங்களிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவும் நிலையில் வவுனியா இராசேந்திரகுளம் பகுதியில் உள்ள ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு ஒரு புதிய வீட்டை தாராள மனப்பான்மையுடன் நிர்மாணிப்பதில் வெற்றி பெற்றுள்ளனர். இப் பணியானது இராணுவத்தின் திறன் மற்றும் நிபுணத்துவத்துடன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் உள்ள 12 நன்கொடையாளர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

திருமதி சாந்தா மற்றும் பிள்ளைகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்களின் அவல நிலை கருத்திற்கொண்டு வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, வெளிநாடுகளில் உள்ளவர்களும் உள்நாட்டு நன்கொடையாளர்களுமாக மொத்தம் 12 நன்கொடையாளர்கள் ஒன்றிணைந்து வன்னியில் இராணுவத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தகுதியான பணிக்கு ஆதரவளிக்க முன்வந்தனர். வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க வவுனியா பிரதேச செயலாளர் மற்றும் அந்த பிரதேச அரச உத்தியோகத்தர்கள் தங்களின் ஒத்துழைப்பை வழங்கினர் என்பதும் குறிப்பிடதக்கதாகும்.

இப் பணியானது 17 (தொ) இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் தமது கட்டளை அதிகாரியான மேஜர் ஜி.டபிள்யூ.ஏ.எஸ்.எல் டி அல்விஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 56 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுள காரியவசம் மற்றும் 562 வது காலாட் பிரிகேட் தளபதியான அனுர ஜயசேகர ஆகியோரின் ஆலோசனையின் பேரில் பணியை நிறைவு செய்தனர். அவர்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்களைப் பயன்படுத்தி சில வாரங்களில் புதிய வீட்டின் கட்டுமான பணிகளை நிறைவு செய்தனர்.

இந் நிகழ்வு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) இடம் பெற்றதுடன் மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். வவுனியா மாவட்டச் செயலாளர் திரு.பி.ஏ.சரத்சந்திர, பல நன்கொடையாளர் பிரதிநிதிகள், வவுனியா பிரதேச செயலாளர் திரு.என்.கமலதாசன், 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 561, 562 மற்றும் 563 வது காலாட் பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், பயனாளியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டதுடன், புதிய வீட்டின் திறப்புகள் சம்பிரதாயபூர்வமாக பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.