Header

Sri Lanka Army

Defender of the Nation

12th December 2022 15:02:15 Hours

17 வது இலங்கை கயிறு இழுத்தல் சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ வீரர்கள் வெற்றி

இலங்கை கயிறு இழுத்தல் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 17வது இலங்கை கயிறு இழுத்தல் சம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 11) கொழும்பு டொரிங்டன் விளையாட்டு அமைச்சு மைதானத்தில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ கயிறு இழுத்தல் சம்மேளனத்தின் தலைவரும், இலங்கை தொண்டர் படையணியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்கள் இராணுவத்தைச் சேர்ந்த 6 திறமையான அணிகளை இந்தப் போட்டியில் பங்குபற்றி தகுதிபெறச் செய்ய வேண்டுமென விரும்பினார்.

பிரிகேடியர் சம்பத் பெர்னாண்டோ அவர்கள் இராணுவ ஆணகள் கயிறு இழுத்தல் அணியை ஒருங்கிணைத்ததுடன், கேணல் தம்மிக திலகரத்ன அவர்கள் இராணுவ மகளிர் கயிறு இழுத்தல் அணியின் பங்கேற்பை ஒருங்கிணைத்தார். நாள் முழுவதும் நடைபெற்ற இப்போட்டியை ஏராளமான இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

இராணுவ அணிகள் பின்வரும் அனைத்து பிரிவுகளிலும் வெற்றி பெற்றனர்:

23 வயதுக்கு கீழ் பெண்கள் (எடைப் பிரிவு - 500 கிலோ) - சம்பியன்

23 வயதுக்கு கீழ் ஆண்கள் (எடைப் பிரிவு - 600 கிலோ) - சம்பியன்

640 கிலோ எடைப்பிரிவு ஆண்கள் - சம்பியன்

560 கிலோ எடைப் பிரிவு பெண்கள் - சம்பியன்

திறந்த பெண்கள் - சம்பியன்

திறந்த ஆண்கள் - சம்பியன்