Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2022 21:49:17 Hours

மறுசீரமைக்கப்பட்ட 10 வது இலங்கை சிங்கப் படையணி தலைமையகம்

10வது இலங்கை சிங்கப் படையணி, 2007 பெப்ரவரி 4ம் திகதி முதல் இராணுவத்தின் 2வது இயந்திரவியல் காலாட்படையணியாக நிறுவப்பட்டதுடன், மீண்டும் 10வது இலங்கை சிங்கப் படையணியாக நிறுவப்பட்டு, கொடி பரிசளிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை அம்பேபுஸ்ஸ சிங்க படையணியின் தலைமையகத்தில் வௌ்ளிக்கிழமை (02) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் இராணுவ தலைமையகத்தின் இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் கலந்துகொண்டார்.

வருகை தந்த பிரதம அதிதியை சிங்க படையணி தலைமையகத்தின் பணிநிலை அதிகாரி 1 லெப்டினன் கேணல் சஞ்சீவ திஸாநாயக்க அவர்கள் நுழைவாயிலில் வரவேற்றதுடன், 10வது சிங்கப் படையணி படையினரால் பாதுகாவலர் வருகை அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

சம்பிரதாய நிகழ்வுகளுக்கு மத்தியில் சிங்க படையணியின் பிரதி நிலைய தளபதி கேணல் வஜிர அமரசிறி அவர்களால் படைத் தளபதி அணிவகுப்பின் மரியாதையைப் பெறுவதற்காக மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களால் இராணுவ சம்பிரதாய மரியாதை மற்றும் பெருமை சேர்க 10வது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சம்பத் நல்லபெருமவிடம் கொடி கையளிக்கப்பட்டது.

முன்னைய 10வது சிங்கப் படையணி படையணியின் சிரேஷ்ட சேவை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், சிங்கப் படையணி தலைமையக பதவி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

1994 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் திகதி நிறுவப்பட்ட 10வது இலங்கை சிங்கப் படையணி விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் போது தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காக தனது சேவையை வழங்கியது. இந்த படையணி 2007 பெப்ரவரி 04 அன்று செயல்பாட்டு தேவைகள் காரணமாக சிங்கப் படையணி படையணியின் படையலகுகளின் பட்டியலில் இருந்து அகற்றப்பட்டு 2 வது இயந்திரவியல் காலாட்படை படையணியாக மாற்றப்பட்டது. கனிஷ்ட படையணியாக அமையபட்ட 24 வது சிங்க படையணி அதே வேளையில் 10 வது படையணியாக இராணுவ உத்தரவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.