Header

Sri Lanka Army

Defender of the Nation

11th December 2022 22:02:26 Hours

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் அனுசரணையாளரின் ஆதரவுடன் இரண்டு பாடசாலைக் கட்டிடங்கள் புனரமைப்பு

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 14 வது காலாட் படைப்பிரிவின் 141 வது காலாட் பிரிகேடின் 6 வது இலங்கை பீரங்கி படையணி மற்றும் 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி படையினர் ஊரபொல யட்டவக்க ஆரம்பப் பாடசாலை மற்றும் புஹுவெல்ல வலகந்த மத்திய கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலைகளில் தனித்தனியாக மறுசீரமைப்புப் பணிகளைத் நிறைவு கட்டிடங்களை புதன்கிழமை (டிசம்பர் 07) மற்றும் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 09) குறித்த பாடசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

6 வது இலங்கை பீரங்கி படையணி சிப்பாய்கள் வரையறுக்கப்பட்ட மாஸ் லெகாடோ நிறுவனம் இரண்டு திட்டங்களுக்கும் வழங்கப்பட்ட நிதியுதவியுடன் ஊரபொல யட்டவக்க ஆரம்பப் பாடசாலையில் கவனிப்பாரற்று கிடந்த நூலகக் கட்டிடத்தை புனரமைத்து புதன்கிழமை (டிசம்பர் 07) ஒப்படைத்தனர். 14 வது காலாட்படை படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஹான் ஜயமன்ன அவர்களின் பணிப்புரையின் கீழ் 141 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பந்துல காரியவசம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

6 வது இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏஎச்எம்டீ குணரத்ன அவர்கள் இந்த திட்டத்தை நெருக்கமாக மேற்பார்வையிட்டார். அதன் முறையான ஒப்படைப்பின் போது, ரூ. 60,000 பெறுமதியான 200 புத்தகங்கள் மற்றும் ரூ.1,20,000 மதிப்புள்ள போட்டோ கொப்பி இயந்திரமும் நன்கொடையாளர்களினால் பரிசளிக்கப்பட்டன.

3 (தொ) கெமுனு ஹேவா படையினர் புஹுல்வெல்ல வலகந்த மத்திய கல்லூரியில் நிதி ஆதாரங்கள், உழைப்பு மற்றும் பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கைவிடப்பட்ட கட்டிடத்திற்கு முழுமையாக பூச்சு பூசினர். கட்டிடத்தின் பூச்சுகள் பூரணமாக பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் படையினர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 09) பாடசாலை அதிகாரிகளுக்கு முறைப்படி வழங்கப்பட்டது.

61 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களின் பணிப்புரையின் கீழ் 613 ஆவது படைப்பிரிவின் தளபதி கேணல் இந்திக ஜயவீர அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மேஜர் பீ.ஏ.ஜி.ஏ.பீ மதித்தபொல திட்டப்பணியையும் 3 (தொ) கெமுனு ஹேவா படையினரின் பணியையும் நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.