Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2022 19:00:26 Hours

விவசாய பாடநெறிக்கான சான்றுதல் வழங்கும் நிகழ்வு

கிளிநொச்சியில் உள்ள இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் பயிற்சி பாடசாலையில் அடிப்படை விவசாயப் பாடநெறி இலக்கம் 6 னை புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட சிப்பாய்கள் 66 பேருக்கு, திங்கட்கிழமை (05) நடைபெற்ற நிகழ்வின் போது அப்பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

6வது இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஏ.எஸ்.பி ஹபுவின்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.

இயற்கை விவசாயம், பயிர் செய்கை, உணவுப் பாதுகாப்பு, இயந்திரங்கள், கால்நடை வளர்ப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட கால்நடைத் தீவனப் பொருட்கள் மற்றும் பிற தொடர்புடைய பகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில் ஒரு மாத காலத்திற்கு இப் பாடநெறி நடாத்தப்பட்டது.

அதே நேரத்தில், 6வது இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணி பயிற்சி பாடசாலையின் தளபதி லெப்டினன் கேணல் டிஎல்சீஎன் முத்துதந்திரிகே, ஆகியோரிடமிருந்து சான்றிதழ்களுடன், புதிதாக பணியமர்த்தப்பட்டவர்கள் தங்களது படைச் சின்னங்களையும் பெற்றனர்.

திறன் அடிப்படையில் பாராட்டுகளைப் பெற்றனர்

மெரிட் வரிசையில் முதலம் இடம் – பீஎம்சீஜி குமாரசிங்க சிப்பாய்

தகுதி வரிசையில் இராண்டாவது இடம் – டபிள்யூஜேகே செனரத் சிப்பாய்

தகுதி வரிசையில் மூன்றாம் இடம் – பீஎல் விஜயரத்ன சிப்பாய்