Header

Sri Lanka Army

Defender of the Nation

06th December 2022 19:50:26 Hours

புதிய மத்திய தளபதி தனது கட்டளை பிரதேசங்களுக்கு விஜயம்

அண்மையில் மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியாக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் தனது கட்டளையின் கீழ் உள்ள இராணுவ அமைப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (02) விஜயத்தை ஆரம்பித்ததுடன், 11 வது காலாட் படைப்பிரிவுத் தலைமையகத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டார்.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்கள், மத்திய படைத் தளபதியை அன்புடன் வரவேற்றதுடன், அவருக்கு,பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது.

மேஜர் ஜெனரல் கல்ப சஞ்சீவ அவர்கள் முதலில் தனது படைப்பிரிவின் வகிப்பங்கு , பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்து விஜயம் செய்த மத்திய தளபதிக்கு விளக்கமளித்தார். தளபதி அவர்கள் படையினர்களுக்கு உரையாற்றுகையில் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கருத்துரைத்தார் 11 வது காலாட் படைபிரிவு தலைமையகத்தில் இருந்து வெளியேறும் முன், குழுப்படம் எடுத்தல் நிகழ்விலும் கலந்து கொண்டதுடன், விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது பாராட்டுக்களையும்,கருத்துக்களையும் பதிவு செய்தார்.

11 வது காலாட் படைப்பிரிவுக்கு செல்வதற்கு முன், பல்லேகலை புதிய இராணுவ தள வைத்தியசாலையில் இறுதிக்கட்ட நிர்மாணப் பணிகளை 11 வது காலாட் படைபிரிவின் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகளுடன் பார்வையிட்டார். பின்னர், பல்லேகலையில் அமைந்துள்ள 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமுக்கு விஜயம் செய்து அங்கு சேவையாற்றும் படையினரைச் சந்தித்தார். வருகை தந்த மத்திய படைத் தளபதியை 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி வரவேற்றார்.

மறுநாள் (03) தம்புள்ளை கீரலகொல்லவில் அமைந்துள்ள 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி முகாமுக்கு மத்திய தளபதி விஜயம் செய்தார். அங்கு அவரை மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க அவர்கள் வரவேற்றதுடன், அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. அவர் அப்பகுதியை சுற்றிப்பார்த்ததுடன், உக்குவெல, போவதென்ன மற்றும் மொரகஹகந்த நீர் மின் நிலையங்களில் சேவையாற்றும் படையினருடன் தனது கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்.

111 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ரோஹித ரத்நாயக்க மற்றும் 11 வது காலாட் படைபிரிவின் ஊழியர்களும் மத்திய தளபதியின் விஜயத்துடன் இணைந்திருந்தனர்.