Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2022 19:00:39 Hours

65 வது படைப்பிரிவு, போதைப்பொருள் பாவனை தொடர்பாக மாணவர்களுக்கு அறிவூட்டல்

முழங்காவில் மத்திய கல்லூரி மற்றும் மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள், இளம் வயதினரை போதைப்பொருள் பாவனையில் இருந்து தடுத்தல் மற்றும் ஆபத்துக்கள் குறித்து அவர்களுக்குக் தெளிவுபடுத்தும் நோக்கத்துடன், 65 வது காலாட் படைப்பிரிவு தலைமையகம் கடந்த காலங்களில் தொடர்ச்சியான விழிப்புணர்வு திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

65 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தலின் கீழ், பூநகரின் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பிரதிநிதிகள், வைத்தியர் துஷாந்தன், முல்லைத்தீவு மாவட்ட மனநல வைத்திய அதிகாரி வைத்தியர் ஜெகரூபன், கிழக்கு மல்லாவி மற்றும் மாந்தை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் துலன்ராஜா ஆகியோரால் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.அதுருகிரிய அவர்களின் உதவியுடன், 65 வது காலாட் படைபிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஜே.டி.யு.டி குமார அவர்களால் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி பிரதம அதிதியாக செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட மனநல அலுவலகமும் இதே சந்தர்ப்பத்தில் அதன் ஊழியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்தது. வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து மருத்துவ சுகாதார வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.