Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2022 18:59:55 Hours

இராணுவ தலைமையகம், பாதுகாப்பு படைத் தலைமையகம் மற்றும் படையணி தலைமையகங்களின் அதிகாரிகளுக்கு 'தொற்றா நோய்கள்' மற்றும் போர் வரலாறு பற்றிய அறிவு

இராணுவத் தலைமையகத்தில் பல்வேறு பணிப்பகங்களில் சேவையாற்றும் பெண் அதிகாரிகள் உட்பட, நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படைத் தலைமையகங்களில் ஷூம் தொழில்நுட்பத்தின் மூலம் ஏறக்குறைய 200 அதிகாரிகளுக்கு 'தொற்றா நோய்கள்' மற்றும் போர் வரலாறு' என்ற தலைப்பில் தொடர் பயிற்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக புதன்கிழமை (30) இராணுவ தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.

இதற்கு முன்னர் கொழும்பு இராணுவ மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவ ஆலோசகர் பிரிகேடியர் (ஓய்வு) வைத்தியர் திருமதி ஏ.எஸ்.எம். விஜயவர்தன அவர்கள் 'தொற்றுநோய்கள்' என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தியதுடன், லெப்டினன் கேணல் சுஜித் சமிந்த அவர்கள் 'யுத்த வரலாறு' தொடர்பில் விரிவிரையினை நடாத்தினார்.

இராணுவத் தலைமையகத்தில் பங்கேற்பாளர்களுக்கு மேலதிகமாக, நாடளாவிய ரீதியில் பாதுகாப்புப் படைத் தலைமையகங்கள் மற்றும் படையணி தலைமையகங்களில் பணியாற்றும் சுமார் 700 அதிகாரிகள் இரு விரிவுரைகளையும் செவிமடுத்தனர்.