Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2022 19:04:52 Hours

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மற்றும் பொலிஸாருடன் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கிரிக்கெட் கழகங்கள் கிரிக்கெட் போட்டியில்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 223 மற்றும் 222 வது காலாட் பிரிகேட்கள், பிராந்தியத்திலுள்ள பல்லின மக்களிடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில், வாழைத்தோட்டம் விளையாட்டு மைதானம் மற்றும் சம்பூர் பொது விளையாட்டு மைதானத்தில் இரண்டு தனித்தனியான கிரிக்கெட் போட்டிகளை நவம்பர் 25 தொடக்கம் 27 ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தன. இதில் முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணிகளின் கிரிக்கெட் வீரர்களும் இணைந்து கொண்டனர்.

இதன்படி, 222 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்போட்டியில், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், பிரதேசத்தின் சிங்கள மற்றும் தமிழ் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 அணிகள் போட்டியிட்டன. சேருநுவர சிவில் பாதுகாப்பு படையணியின் கிரிக்கெட் அணியினர் சம்பியன்ஷிப்பை கைப்பற்றியதுடன், சூர்நகர் காவேரி விளையாட்டு கழகம் இரண்டாம் இடத்தைப் கைப்பற்றியது. 222 வது காலாட் பிரிகேட் தளபதி, 24 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள கிரிக்கெட் ரசிகர்கள், 222 வது காலாட் பிரிகேட் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிகளையும் பரிசளிப்பு விழாவையும் காண அங்கு வந்திருந்தனர்.

இதேவேளை, 223 வது காலாட் பிரிகேடின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (27) சம்பூர் பொது விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில் இராணுவம், கடற்படை, பொலிஸ், தமிழ் மற்றும் முஸ்லிம் விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 24 அணிகள் போட்டியிட்டன. 'சம்பூர் ஸ்டார் ஏ' அணி, கடும் மோதலுக்குப் பிறகு சம்பியன்ஷிப்பை வென்றது, மூதூர் ரியல் ஸ்டார் அணி போட்டியின் இரண்டாம் இடத்தைப் கைப்பற்றியது.

கிரிக்கட் போட்டியின் இறுதி பரிசளிப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக 22 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம, இலங்கை கடற்படைத் தளம் பெரகும்பாவின் கட்டளை அதிகாரி, விதுர கடற்படை பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி, 223 வது காலாட் பிரிகேடின் தளபதி, திருகோணமலை பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பிரதேசத்தின் பொதுமக்கள் இறுதி பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிகளையும் பார்வையிட்டனர்.