Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd December 2022 19:06:56 Hours

படையணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் இறுதிப் போட்டி

இராணுவத்தின் படையணிகளுக்கு இடையிலான டி-20 இறுதிப் போட்டிகள் தொம்பகொடவில் உள்ள இலங்கை இராணுவப் போர்க்கருவிப் படையணியின் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (2) நடைபெற்றது.

18 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் இலங்கை சிங்கப் படையணி மற்றும் இலங்கை போர்க்கருவி படையணி இறுதிப் போட்டிக்கு தெரிவாகின. எதிர்பாராத மழையால் இறுதிப் போட்டி நிறுத்தப்பட்டு இரு அணிகளும் இணை சம்பியன்களாக அறிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்கள் கலந்து கொண்டார்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும், இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க, நிதி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் நாயகமும், இலங்கை இராணுவ கிரிக்கெட் குழுவின் உப தலைவருமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர, காலாட் படையணி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும், இலங்கை கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சமிந்த லமாஹேவா, இலங்கை இராணுவத்தின் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன, வடமத்திய முன்னரங்கு பாதுகாப்பு பகுதியின் தளபதியும், இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியந்த வீரசிங்க, இலங்கை இராணுவ கிரிக்கட் குழுவின் செயலாளர் கேணல் சந்துன் டயஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அத்துடன் இறுதிப்போட்டியை ஏராளமான அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.

நவம்பர் 10 திகதி தொடங்கிய இந்தப் போட்டியானது, இறுதிப் போட்டி வரை தொடர்ந்தது. இறுதிப் போட்டி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி 4 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை ஆரம்பித்து ஆட்டத்தை நிறுத்தியது. இந்த பரிசு வழங்கும் விழாவில், முந்தைய போட்டிகளில் இணை சம்பியன்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பரிசுக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.

படையணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் பின்வரும் அணிகள் பரிசுக் கிண்ணங்களை வென்றன.

டி-20 கிரிக்கெட் போட்டி

இணை சம்பியன்கள் - இலங்கை சிங்கப் படையணி மற்றும் இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி

வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டி - 'ஏ' பிரிவு

சம்பியன்கள் - இலங்கை பீரங்கிப் படையணி

இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி

தொடர் ஆட்ட நாயகன் - சிப்பாய் கேடபிள்யூஎஸ்எல் பெர்னாண்டோ - இலங்கை இராணுவ போர்க்கருவி படையணி

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் - கன்னர் கே.எல்.எம்.எஸ் செனவிவிக்ரம – இலங்கை இராணுவ பீரங்கிப் படையணி

சிறந்த பந்து வீச்சாளர் - கன்னர் எம்ஏடபிள்யூ ஜயசூரிய - இலங்கை இராணுவ பீரங்கிப் படையணி

சிறந்த துடுப்பாட்டக்காரர் - லான்ஸ் கோப்ரல் எல்ஈகே எதிரிசிங்க - இலங்கை இராணுவ கவச வாகன படையணி

வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டி - 'பீ' பிரிவு

சம்பியன்கள் - இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி

இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி

தொடர் ஆட்ட நாயகன் – சிப்பாய் ஜேஎல்டிஎஸ்எஸ் குமார - இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் - சிப்பாய் ஜேஎல்டிஎஸ்எஸ் குமார - இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி

பெண்கள் கிரிக்கெட் போட்டி

சம்பியன் – 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி

இரண்டாம் இடம் – 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி

தொடரின் சிறந்த பெண் - லான்ஸ் கோப்ரல் ஜே.எம்.டி.பி ருவன்மாலி - 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி

இறுதிப் போட்டியின் சிறந்த பெண் போட்டியாளர் - லான்ஸ் கோப்ரல் டபிள்யூஎன் சமன்மாலி - 5 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணி