Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2022 15:56:36 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் அதிகாரிகளுக்கு 'வாகன சேவை நடைமுறைகள்' தொடர்பான அறிவு

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்களின் ஏற்பாட்டில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியில் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு நிசான், சுசுகி மற்றும் யமஹா வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விற்பனை முகவரான அசோசியேட்டட் மோட்டார்வேஸ் தனியார் நிறுவனத்தினரால், இலங்கையில் 'சேவை முகாமைத்துவம் மற்றும் வாகன சேவையில் நல்ல நடைமுறைகள்' என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை கொழும்பு - 02 யூனியன் பிளேஸில் அமைந்துள்ள எஎம்டபிள்யு கேட்போர் கூடத்தில் நவம்பர் 24-25 திகதிகளில், இடம் பெற்றது.

இப் பயிற்சி பட்டறையில் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 20 அதிகாரிகள் கலந்து கொண்டதுடன், இந்த செயலமர்வில் மேற்கூறிய தலைப்புடன் இணைக்கப்பட்ட பல்வேறு அம்சங்களில் கலந்துரையாடப்பட்டது, மேலும் திரு ஸ்டீபன் ரீட்-பணிப்பாளர் (விற்பனைக்குப் பிந்திய சேவை), திரு யோஹான் டி சொய்சா-பணிப்பாளர் (அலகு விற்பனை) மற்றும் திரு பந்துல மடுகல்லே ஆகியோரால் விரிவுரைகள் வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு இராணுவ அதிகாரிகளை பங்கேற்க செய்ய சிரேஷ்ட முகாமையாளர் பயிற்சி மற்றும் மேம்பாடு அவர்களால் அனுசரனை வழங்கப்பட்டது.

மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர இந்த ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டார்.