Header

Sri Lanka Army

Defender of the Nation

30th November 2022 15:51:56 Hours

யாழ் படையினருக்கு தேசிய தொழிற்பயிற்சி தகுதி 3 மற்றும் தேசிய தொழிற்பயிற்சி தகுதி 4 பாடநெறிகள்

தேசிய தொழிற்பயிற்சி தகுதி 3 மற்றும் தேசிய தொழிற்பயிற்சி தகுதி 4 தொடர்பான பயிற்சியில் இராணுவத்தினரை மேம்படுத்தும் நிமித்தம் மூன்று கட்ட வேலைத்திட்டம் நவம்பர் 26-28 திகதிகளில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபை, மூன்றாம் நிலை கல்வி மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

இப் பயிற்சியில் 08 அதிகாரிகள் மற்றும் 300 பேர் ஓய்வுபெறும் தருவாயில் உள்ளவர்களில் பெரும்பான்மையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 தொழில்சார் வீரர் இப்பாடநெறியில் கலந்து கொண்டனர். இப்பாடநெறியானது தேசிய தொழிற்பயிற்சி தகுதி 3 மற்றும் தேசிய தொழிற்பயிற்சி தகுதி 4 தொடர்பான தகுதிகளை சர்வதேச மட்டத்தில் நன்கு அங்கீகரிக்கப்பட்ட பட்டத்திற்கு சமமானவையாக வழங்கப்படுகின்றன.

முதற்கட்டத் தேர்வுத் திட்ட நிகழ்வு தொழில் பயிற்சி அதிகாரசபை பணிப்பாளர், மூன்றாம் நிலை கல்வி பணிப்பாளர் மற்றும் தொழிற்கல்வி அதிகாரசபை ஆகியோரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டதுடன்,இம் மூன்று நாள் பயிற்சி திட்டத்தை மேற்கொள்ள இராணுவ அதிகாரிகள் தங்கள் ஆதரவை வழங்கினர்.