Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2022 19:16:52 Hours

போர்க்கருவிகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக பிரிகேடியர் அஜித் முனசிங்க பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ போர்க்கருவிகள் படையணியின் பிரிகேடியர் அஜித் முனசிங்க அவர்கள் இராணுவத் தலைமையகத்தின், போர்க்கருவி பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராகப் பதவியேற்றார். இவர் பிரிகேடியர் இந்திரஜித் விதானச்சி அவர்களுக்கு பின்னராக இந்’த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

மகா சங்க உறுப்பினர்களின் ‘பிரித்’ பராயணங்களுக்கு மத்தியில், புதிய பணிப்பாளர் சுப நேரத்தில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அலுவலகத்தை ஏற்றுக்கொண்டார். பிரிகேடியர் அஜித் முனசிங்க அவர்கள் புதிய அலுவலகத்தில் ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டதை தொடர்ந்து, பிக்கு ஒருவரால் சுருக்கமான சொற்பொழிவும் (அனுஷாசனம்) நிகழ்த்தப்பட்டது.

அலுவலக பொறுப்பேற்பு நிகழ்வில் பணிப்பகத்தில் உள்ள பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

இந்த நியமனத்திற்கு முன்னர் பிரிகேடியர் அஜித் முனசிங்க அவர்கள் இலங்கை இராணுவத்தின் போர்கருவி படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதியாக கடமையாற்றினார்.