Header

Sri Lanka Army

Defender of the Nation

25th November 2022 19:21:43 Hours

அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகம் அதன் உயிர்நீத்த போர்வீரர்களின் ஈடு இணையற்ற தியாகங்களுக்கு மரியாதை

அம்பேபுஸ்ஸ இலங்கை சிங்கப் படையணி தலைமையகத்தில் தொடர்ந்து 30 வது வருடமாக நவம்பர் 19 தொடக்கம் 20 வரை உயிர்நீத்த போர் வீரர்களின் நினைவுதின நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டது. 144 அதிகாரிகள் மற்றும் 3720 சிப்பாய்கள் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் பணியில் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்.

உயிர்நீத்த இலங்கை சிங்கப் படையணியின் போர்வீரர்களின் நினைவாக மரியாதையை வழங்கும் நோக்கத்துடன், நான்கு முக்கிய மதங்களின் பல மத விழாக்களில் அவர்களது குடும்பங்களின் அர்ப்பணிப்புமிக்க பாத்திரங்களை நினைவுகூரும் நோக்கத்துடன், படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் போது இந்நிகழ்வில் அன்னதானம் வழங்கி, உயிர்நீத்த போர் வீரர்களின் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

'விரைவாகவும் தைரியமாகவும்' எனும் இலங்கை சிங்கப் படையணி நேசத்துக்குரிய பொன்மொழியை அங்கீகரிப்பது போல், 66 பௌத்த துறவிகளுக்கு அன்னதானம் வழங்கியதைத் தொடர்ந்து இரவு முழுவதும் நடந்த 'பிரித்' பரயாணங்களின் போது உயிர்நீத்த போர் வீரர்களுக்கு ஆசி வழங்கப்பட்டது. தாய், தந்தை, விதவைகள், மகன்மார் மற்றும் மகள்மார் உட்பட வீரமரணம் அடைந்த போர் வீரர்களின் உறவினர்கள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தாய்நாட்டின் அமைதியைக் காக்க பிரிந்த அன்பர்களை வணங்குவதற்காக அணிவகுத்து நிற்கும் போது, பியுகல் ஒலி எழுப்புதலின் பின்னர் உயிர்நீத்த போர் வீரர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

விழாவானது அன்பான குடும்ப உறுப்பினர்களின் கண்ணீர்களுக்கு மத்தியில் இறுதி பியுகல் ஒலியுடன் முடிவடைந்தது.

அந்த நினைவேந்தல் நிகழ்வுகளின் போது இலங்கை சிங்க படையணியின் நிலையத் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஒன்றுகூடியிருந்தனர்.