Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2022 18:39:43 Hours

61 வது காலாட் படைபிரிவு தளபதி தென் மாகாண ஆளுநரை சந்திப்பு

அண்மையில் நியமிக்கப்பட்ட 61 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்கள் 24 நவம்பர் 2022 அன்று தென் மாகாண ஆளுநர் திரு வில்லி கமகே மற்றும் காலி மாவட்டச் செயலாளர் திரு சாந்த வீரசிங்க ஆகியோருடன் சிநேகபூர்வ சந்திப்புகளை நடத்தினார்.

இந்த சந்திப்புகளின் போது, காலி மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் சிவில் ஒருங்கிணைப்பு விடயங்கள் தொடர்பிலான பல முக்கிய அம்சங்கள் முறையே ஆளுநர் அலுவலகத்திலும் மாவட்ட செயலக காரியாலயத்திலும் கலந்துரையாடப்பட்டன.