Header

Sri Lanka Army

Defender of the Nation

26th November 2022 18:34:33 Hours

18 வது விஜயபாகு படையினர் மூலம் விளையாட்டுப் பொருட்கள் விநியோகம்

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 24 வது காலாட் படைபிரிவின் 18 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், 18 நவம்பர் 2022 அன்று கல்முனை, நிந்தவூர் இமாம் கஷால் பாடசாலையில் தனியார் நன்கொடையாளரின் அனுசரணையுடன் மாணவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களை பரிசாக வழங்கினர்.

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் மற்றும் 24 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர ஆகியோரின் ஆசிர்வாதத்துடன் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. திரு. எஸ்எம்எல் நசிரூன் அவர்கள் விளையாட்டுக்குத் தேவையான இந்த உபகரணங்களின் செலவுக்கு நிதியுதவி வழங்க முன்வந்தார்.

இதன்படி, 241 வது காலாட் பிரிகேடின் தளபதி பிரிகேடியர் சந்திர அபேகோன் அவர்களுடன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நன்கொடையாளர் திரு எஸ்.எம்.எல். நசிரூன், பாடசாலை அதிபர், 241 வது காலாட்படை பிரிகேடின் சிவில் விவகார அதிகாரி, 18 வது விஜயபாகு காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் பல அழைப்பாளர்களும் பங்குபற்றினர்.