Header

Sri Lanka Army

Defender of the Nation

24th November 2022 18:11:24 Hours

4 வது காலாட் படை படையினரின் ஒத்துழைப்பில் சக சிப்பாய்க்கு புதிய வீடு

தம்புள்ளையில் அமைந்துள்ள 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படை படையினர் படையணியில் பணிபுரியும் சக சிப்பாய்க்கு அவர் தனது வீட்டை முழுமையாக நிர்மாணிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை பெற்றதினை தொடர்ந்து தமது தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி வாரியபொலவில் புதிய வீட்டை நிர்மாணித்துள்ளனர்.

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் இராணுவ பதவிநிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டபிள்யூ.டி.டி.ஆர் வீரபுர அவர்களின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

கட்டுமானக் கட்டணங்களைச் சமாளிக்க முடியாத பயனாளி 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் படைத் தளபதியிடம் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப உதவியினை நாடினார்.

சில வாரங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஞாயிற்றுக்கிழமை (20) 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரியின் அழைப்பின் பேரில் மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களினால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்ட வைபவத்தின் போது வழங்கப்பட்டது. அன்றைய தினம் பிரதம அதிதி அவர்களால் பதாகை திரைநீக்கம் செய்து, நாடா வெட்டப்பட்டு ஆரம்ப சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை தொடர்ந்து பயனாளிக்கு சாவியினை கையளித்தார்.