Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2022 22:16:52 Hours

புதிதாக நியமிக்கப்பட்ட கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி 22 மற்றும் 23 வது படைப்பிரிவுகளுக்கு விஜயம்

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி அவர்கள் நவம்பர் 15-16 திகதிகளில் கிழக்கின் 22 வது காலாட் படைபிரிவு மற்றும் 23 வது காலாட் படைபிரிவுக்கு தனது முதல் விஜயத்தை மேற்கொண்டார்.

22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சாலிய அமுனுகம மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க ஆகியோர் தனித்தனியாக அவருக்கு அன்பான வரவேற்புகளை வழங்கினர்.

படைப்பிரிவுகளின் பிரதான நுழைவாயில்களில் இராணுவ மரபுகளுக்கு ஏற்ப தனித்தனி பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. இரு படைப்பிரிவுகளின் பணிநிலை அதிகாரிகளால், வகிபங்கு மற்றும் பணிகள், பாதுகாப்பு, அபிவிருத்தி பணிகள் மற்றும் பொறுப்பான பகுதிகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.

தொடர்ந்து புதிய கிழக்குத் தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன், அனைத்து மட்டங்களிலும் உயர்தர ஒழுக்கத்தைப் பேணுகின்ற அதேவேளை, தொடர்ச்சியான தொழில் பயிற்சி மற்றும் நல்ல பணியின் அவசியத்தை வலியுறுத்தினார். மேலும், கிழக்கு பகுதிகளில் விவசாயம் மற்றும் விவசாயம் துறையை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

முகாம் வளாகத்தினுள் அத்தினத்தின் நினைவாக மரக்கன்று நாட்டியதுடன் படைப்பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகளுடன் குழு படத்தினை பெற்றுக் கொண்டதினை தொடர்ந்து படையினருடன் உரையாடல் இடம்பெற்றன. 23 வது படைப்பிரிவிக்கான விஜயம் அனைத்து நிலையினருடனான தேனீர் விருந்துபசாரத்தினுடன் நிறைவுற்றது.

கும்புறுப்பிட்டியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் உத்தேச 17 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணித் தலைமையகத்திற்கு கள விஜயம் மேற்கொண்டதன் பின்னர் 22 வது படைப்பிரிவு விஜயம் முடிவடைந்தது, அதனைத் தொடர்ந்து வருகை தந்த கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதிக்கு மதிய உணவு பரிமாறப்பட்டது. இந்த விஜயத்தின் போது அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் உடனிருந்தனர்.