Header

Sri Lanka Army

Defender of the Nation

19th November 2022 20:43:15 Hours

61 வது படைப்பிரிவு படையினரால் ஹிக்கடுவ கடற்கரை தூய்மையாக்கல்

ஹிக்கடுவை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுடன் கைகோர்த்து 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் உதய ஹேரத் அவர்களின் வழிகாட்டல்களுக்கு அமைய வியாழன் (17) காலை ஹிக்கடுவ பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் முயற்சியாக படையினர் சுற்றுலாப் பயணிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடன் கடற்கரையை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

14 வது (தொ) இலங்கை கெமுனு ஹேவா படையணியின் 50 படையினரின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. 613 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் இந்திக ஜயவீர மற்றும் 14 வது (தொ) இலங்கை கெமுனு ஹேவா படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஜி.எச்.ஏ.ஐ. விஜேரத்ன ஆகியோர் படையினரை கண்காணித்து வழிநடத்தினர்.