Header

Sri Lanka Army

Defender of the Nation

21st November 2022 22:15:00 Hours

தல் செவனவில் புதிய இணைய தளம்

யாழ். இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் பிரபல ஒய்வு விடுதியான ‘தல் செவன’ தனது முகாமைத்துவத்திற்காக உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

தகவல் தொழிநுட்ப பணிப்பகத்தினால் உருவாக்கப்பட்ட இந்த இணைய தளத்தை யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர மற்றும் விடுதியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் அஜித் சேனாதீர ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

விடுதியின் செயற்பாட்டை இலகுபடுத்தும் வகையில் நிர்வாக மென்பொருள் முறைமை இதனேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இணையத்தள ஆரம்ப நிகழ்வில் ‘தல் செவன விடுதியில் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரிகேடியர் அஜித் சேனாதீர அவர்களின் அழைப்பின் பேரில், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.