Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 14:00:14 Hours

இராணுவ பளுாதூக்கு வீரர்கள் தேசிய போட்டியில் வெற்றி

பளுதூக்குதல் தேசிய சாம்பியன்ஷிப் - 2022, பொலன்னறுவை, கல்லெல்ல தேசிய விளையாட்டு வளாகத்தில் நவம்பர் 10 முதல் 13 வரை நடைபெற்றதுடன் இதில் கடற்படை மற்றும் விமானப்படை அணிகள் உட்பட 11 நாடளாவிய விளையாட்டுக் கழகங்களின் வீரர்களை தோற்கடித்து இராணுவ பளுதூக்கும் வீரர்கள் சாம்பியன்ஷிப்பைத் தட்டிச் சென்றனர்.

இலங்கை இராணுவ ஆண்கள் அணி 34 புள்ளிகளைப் பெற்று சம்பியன்ஷிப்பை வென்றதுடன், இலங்கை இராணுவ மகளிர் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இராணுவ பளுதூக்கும் வீரர்கள் மொத்தம் 4 தங்கப் பதக்கங்கள், 9 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்களை வென்று சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்றனர். இந்த நிகழ்வில் சிறந்த போட்டியாளராக 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியை சேர்ந்த சார்ஜன்ட் வைடிஐ குமார தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை இராணுவ உடற்கட்டமைப்பு பளுதூக்குதல் மற்றும் பவர் லிப்டிங் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த அவர்கள் கலந்துகொண்டதுடன் முழு அணியினருக்கும் ஊக்கமளித்தார். பொலன்னறுவையில் நடந்த இறுதிப் போட்டியினையும் கண்டுக்களித்தார்.

சாம்பியன்ஷிப்பில் வெற்றி பெற்றவர்கள் இங்கே:

ஆண்கள்

சிறந்த பளுதூக்கல் வீரர் சார்ஜென்ட் வை.டி.ஐ. குமார - 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - தங்கப் பதக்கம் (55 கிலோ), 03 புதிய இலங்கை சாதனைகள், 02 புதிய பொதுநலவாய சாதனைகள் பதிவு

சிப்பாய் கே.சி.ஏ.எஸ்.டி. ஜெயவர்த்தன – முதலாவது இலங்கை இராணுவ பொது சேவைப்படையணி - வெள்ளிப் பதக்கம் (55 கிலோ)

சார்ஜென்ட் ஜே.ஏ.சி. லக்மால் - முதலாவது கமாண்டே படையணி - தங்கப் பதக்கம் (61 கிலோ)

சிப்பாய் எம்.எஸ்.எஸ். தனபால - 11 வது இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணி- வெள்ளிப் பதக்கம் (61 கிலோ)

பொம்பொடியர் எச்.ஆர்.ஜே. விஜயானந்த - 15 வது இலங்கை பீரங்கி படையணி - வெள்ளிப் பதக்கம் (81 கிலோ)

சிப்பாய் கே.பி.டபிள்யூ. ஸ்ரீமால் - 2 இலங்கை இராணுவ பொது சேவைப்படையணி - வெள்ளிப் பதக்கம் (89 கிலோ) சிப்பாய் எஸ்சகேசிஎம் கருணாரத்ன- 18 வது இலங்கை இராணுவ தேசிய பாதுகாவலர் படையணி வெள்ளிப் பதக்கம் (96 கிலோ)

சிப்பாய் கே.டி. விமந்த - 2 இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - வெள்ளிப் பதக்கம் (102 கிலோ)

அதிகாரவனையற்ற அதிகாரி II ஏ.பி.எஸ். அபேவிக்ரம - 15 வது இலங்கை பீரங்கி படையணி - தங்கப் பதக்கம் (109 கிலோ), புதிய இலங்கை சாதனை (136 கிலோ ஸ்னாட்ச்)

சிப்பாய் பி.ஏ.என். அஞ்சனா - 2 இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - வெண்கலப் பதக்கம் (109 கிலோ மேல்)

பெண்

சிப்பாய் சி.எஸ்.எம். சந்தரதிலக்க – 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - வெள்ளிப் பதக்கம் (49 கிலோ)

சிப்பாய் டி.எம்.என்.எஸ். திசாநாயக்க - 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - வெள்ளிப் பதக்கம் (55 கிலோ)

லான்ஸ் கோப்ரல் டி.டி.டி. அபேசேகர - 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப்படையணி - தங்கப் பதக்கம் (64 கிலோ)

சிப்பாய் எம்.டபிள்யூ.பி.ஏ.கே. செவ்வந்தி - 4 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி- வெண்கலப் பதக்கம் (64 கிலோ)

சிப்பாய் எச்.எஸ்.கே. உதேஷிகா - 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - வெள்ளிப் பதக்கம் (71 கிலோ)

சிப்பாய் எச்.ஏ.எச்.ஜே. ஹப்புஆராச்சி – 2 வது இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி - வெண்கலப் பதக்கம் (76 கிலோ)

சிப்பாய் எஸ்.என்.எம்.பி. அத்தநாயக்க - 4 வது இலங்கை இராணுவ மகளீர் படையணி - வெண்கலப் பதக்கம் (87 கிலோ)