Header

Sri Lanka Army

Defender of the Nation

16th November 2022 16:30:25 Hours

7 வது விஜயபாகு படையணியின் 30வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 100 படையினரால் யாழ். நோயாளர்களுக்கு இரத்த தானம்

யாழ். சாவகச்சேரி 7 வது விஜயபாகு காலாட்படை படையணியின் 100 இராணுவ படையினரால் தனது 30 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, யாழ். நோயாளர்களுக்கு இரத்த தானம் மற்றும் சிறுவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டன. இந் நிகழ்வானது இராணுவ முறைகளுக்கமைய 2022 ஒக்டோபர் 26 முதல் நவம்பர் 4 திகதி வரை இடம் பெற்றது.

இத் திட்டம் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் 523 வது பிரிகேட்டின் 7 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினரால், கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஐ.கே.ஜி.எஸ்.என்.ஏ பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

ஆண்டு நிறைவின் முதல் கட்டமாக யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்குவதற்காக முகாம் வளாகத்தினுள் 7 வது விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள் மற்றும் 100 படையினர்களுடன் இரத்தம் வழங்கும் நிகழ்வுடன் நிகழ்வு ஆரம்பமானது. யாழ் போதனா வைத்தியசாலையில் கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு மிகவும் அத்தியாவசியமானதும் இன்றியமையாததுமான இரத்தம் விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் இரத்த வங்கிக்கு வழங்கப்பட்ட சிறந்த செயலுக்காக வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினரால் பாராட்டப்பட்டனர்.

7 வது விஜயபாகு காலட் படையணியின் அதிகாரிகளும் சிப்பாய்களும் தங்கள் சொந்தப் பணத்தைப் பயன்படுத்தி அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து கைதடியில் உள்ள சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்கு ஒக்டோபர் 31 ஆம் திகதி விநியோகித்தனர். குறித்த இல்லத்தின் நிர்வாகிகள் மற்றும் சிறுவர்கள் தங்கள் நன்றியையும், ஆண்டு நிகழ்விற்கும் தங்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டனர்.

இந் நிறைவான்டை முன்னிட்டு (நவம்பர் 4), 7 வது விஜயபாகு காலட் படையணியின் படையினரால் கட்டளை அதிகாரிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் அவர் படையினருக்கு உரையாற்றியதை தொடர்ந்து படையினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 'ரணவிரு உபஹார மந்திரிய' மற்றும் புதிய தொலைக்காட்சி அறை ஆகியவற்றை திறந்துவைத்தார். பின்னர் அனைத்து படையினருடன் மதிய உணவு விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.