Header

Sri Lanka Army

Defender of the Nation

15th November 2022 15:30:14 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி படையினரால் கரட் பயிர் செய்கை

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை பணிப்பகத்தின் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியில் பணியாற்றும் படையினர் அவர்களின் பயிர் செய்கையில் மேலும் ஒரு பரிமாணத்தை சேர்கும் வகையில் அரச தேசிய உணவுப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக ஏற்கனவே இணைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் எண்ணகருவிற்கமைய முதன் முறையாக சில நாட்களுக்கு முன்னர் டயகமவில் கட்டம் 1 இன் கீழ் 3.5 ஏக்கர் நிலப்பரப்பில் கரட் பயிர் செய்கையை ஆரம்பித்தனர்.

25 ஏக்கர் நிலப்பரப்பில் கரட் பயிரிடுவது, பல கட்டங்களின் கீழ் மண்ணைத் தயார் படுத்தல் நாட்டின் உணவுப் பாதுகாப்புத் திட்டத்திற்கு துணைபுரிவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. தேசியத் தேவையை ஆதரிப்பதற்காக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களால் பசுமை விவசாய வழிகாட்டுதல் குழுவை நிறுவியதன் பின்னர் தற்போது 19 இராணுவப் பண்ணைகள் செயல்படத் தொடங்கியுள்ளன.

2021 ஜனவரி 4 அன்று ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி இராணுவத்திற்குச் சொந்தமான பண்ணைகள் மற்றும் நிலங்களில் அனைத்து வகையான பயிர்களையும் பயிரிட்டுள்ளது. மண்ணின் தன்மையினை விஞ்ஞான ரீதியில் மதிப்பீடு செய்து புதிய உத்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் படையினர் இப்போது டயகமவில் கரட் விதைகளை நடும் செயற்பாட்டில் உள்ளனர்.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர அவர்கள் மற்றும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஷ ராஜபக்ஷ ஆகியோர் இத் திட்டத்தின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர்.