Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2022 19:00:05 Hours

12 வது கெமுனு ஹேவா படையணி படையிணரால் அரலகங்வில கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்கல்

கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது கெமுனு ஹேவா படையணி படையினரால் 50 கர்ப்பிணிப் பெண்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (09) நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் அரலகங்வில மகாவலி மையத்தில் நடைப்பெற்றது.

அரலகங்வில மற்றும் திம்புலாகல பிரதேசங்களில் வசிக்கும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தானியங்கள், ஊட்டச்சத்துக்கள், பால்மா, அரிசி, பருப்பு போன்றவை அடங்கிய தலா 5000/= பெறுமதியான உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டன. இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க 'மாஸ்டர் செப்ஸ்' உரிமையாளரான திருமதி திலினி விதானகே தனது நண்பர்களுடன் இணைந்து நன்கொடைக்கான நிதியுதவியினை வழங்கினர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்கள் நன்கொடையாளர் பிரதிநிதிகள், 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஷெவந்த் குலதுங்க, 232 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிரியந்த மலவரகே, கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக பிரதம சிவில் விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி கேணல் ரஜீவ் பெர்னாண்டோ மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.