Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2022 20:03:05 Hours

இயந்திரவியல் காலாட் படையணி படையினரால் மேலும் இரு வீடுகள் நிர்மாணிப்பு

இயந்திரவியல் காலாட் படையணியின் முக்கிய அங்கமாக இயந்திரவியல் காலாட் படையணி படையினர்களுக்கு ஐந்து புதிய வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தின் தியபெதும மற்றும் கல்கமுவவில் இரண்டு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

2 வது இயந்திரவியல் காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரவனையற்ற அதிகாரி ஒருவர் கல்கமுவவில் தனக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் சாவியை இத்திட்டத்தின் ஸ்தாபகரும் இயந்திரவியல் காலாட் படையணியின் படைத் தளபதியும் பிரதி பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களிடமிருந்து சனிக்கிழமை (12) நடைப்பெற்ற எளிய நிகழ்வின் மூலம் பெற்றுக்கொண்டார்.

மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகம் மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு என்பன இணைந்து இப்புதிய வீட்டினை நிர்மாணித்தனர்.

இதே திட்டத்தில் இயந்திரவியல் காலாட் படையணியின் மற்றொரு வீரருக்கு தெஹியத்தகண்டிய தியபெதுமவில் வீடு நிர்மாணிக்ப்பட்டதுடன் சமீபத்தில் நடைப்பெற்ற விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டது. 5 வது இயந்திரவியல் காலாட் படையணி தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் சிப்பாய்களால் நிர்மாணிக்கப்பட்ட இவ் வீட்டுக்கு படையணி தலைமையகம் மற்றும் இயந்திரவியல் காலாட் படை சேவை வனிதையர் பிரிவினரால் நிதியுதவியளிக்கப்பட்டது.

தெஹியத்தகண்டிய தியபெதுமவில் இடம்பெற்ற இவ் வீடு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக இயந்திரவியல் காலாட் படையணியை சேர்ந்த 66 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பிரியதர்ஷன அவர்கள் இயந்திரவியல் காலாட் படையணி நிலையத்தளபதி பிரிகேடியர் அனுர அபேசிங்க மற்றும் 5 வது இயந்திரவியல் காலாட் படையணி கட்டளை அதிகாரி ஆகியோருடன் கலந்துகொண்டார்.

ஒரு சில மாதங்களுக்குள், முதலாம் கட்டத்தின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி தகுதியானவர்களுக்கு ஐந்து வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம் எனும் இலக்கை எட்டியுள்ளது.