Header

Sri Lanka Army

Defender of the Nation

14th November 2022 18:45:05 Hours

இராணுவ வழங்கல் தளபதி கிழக்கில் நிர்வாக விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்

இராணுவ வழங்கல் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் அவர்கள் புதன்கிழமை (9) கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் கட்டளையின் அனைத்து அலகுகளுக்கும் விஜயத்தினை மேற்கொண்டார்.

வருகை தந்த சிரேஷ்ட அதிகாரி அந்தக் கள அமைப்புகளின் நிர்வாக மற்றும் வழங்கல் விவகாரங்கள் தொடர்பான கலந்துரையாடல்களில் பங்கேற்றார்.

கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தளபதி மேஜர் ஜெனரல் சானக மெத்தானந்த தலைமையில், கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதியின் சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகளுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து கிழக்கு முன்னரங்க பராமரிப்பு பகுதி தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் மேஜர் ஜெனரல் இந்து சமரகோன் நாட்டி வைத்தார்.