Header

Sri Lanka Army

Defender of the Nation

13th November 2022 18:46:56 Hours

அம்பாறை போர் பயிற்சி பாடசாலையில் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பயிற்சிப் பாடநெறி நிறைவு

கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பயிற்சி பாடநெறி இல - 99 இன் விடுகை அணிவகுப்பு அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையில் சனிக்கிழமை (12) நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை போர் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் ருவன் முனிபுர அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்களின் திறனை மேம்படுத்துவதே இப்பாட திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இராணுவத்தின் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் 74 அதிகாரவனையற்ற அதிகாரிகள் இப்பயிற்சியில் பங்கேற்றினர். இப்பாடநெறி 3 மாத காலத்திற்கு நடாத்தப்பட்டது.

இப்பாடநெறியில் சிறந்த மாணவராக 10 வது கஜபா படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஆர்.பி.டி.ஏ.எஸ். கித்சிறி தெரிவு செய்யப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் நடைபெற்ற அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.