Header

Sri Lanka Army

Defender of the Nation

13th November 2022 18:50:50 Hours

இராணுவத்தின் முயற்சியில் ஒட்டுசுட்டான் விதவை பெண்ணுக்கு புதிய வீடு

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படைப்பிரிவின் 642 வது பிரிகேடின் 23 வது விஜயபாகு காலாட் படையணி படையினர்கள் கொழும்பு றோயல் கல்லூரி தமிழ் வகுப்பு (1980) வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறுப்பினர்களால் வழங்கப்பட்ட அனுசரணையினால், ஒட்டுசுட்டானில் குடிசையில் வசித்து வந்த ஏழை விதவை பெண்ணுக்கு ஒரு புதிய வீட்டினை நிர்மாணித்தனர்.

சில மாதங்களுக்கு முன்னர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் அவர்களின் தலைமையில், அக்கல்லூரியின் பழைய மாணவர்கள் குழுவினர் விதவை பெண்ணான திருமதி இரத்தினம் பத்மராஜினி அவரது மகளுடன் வருமையில் வசிப்பதை இரணுவத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அவருக்கு புதிய வீட்டைக் நிர்மாணிப்பதற்கு முன்வந்தனர். மேலும் முல்லைத்தீவு இராணுவத்தினரின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள ஆதரவுடன் இந்த வீட்டினை நிர்மாணித்தனர்.

முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுடன் கலந்தாலோசித்து, 23 வது விஜயபாகு காலாட் படையணி கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 23 வது விஜயபாகு காலாட் படையணியின் சிப்பாய்கள் அனுசரணையாளர்களால் வழங்கப்பட்ட மூலப்பொருட்களைக் கொண்டு பல வாரங்களுக்குள் இந்த வீட்டை நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

நவம்பர் 9 ஆம் திகதி புதிய இல்லத்தின் திறப்பு விழா நிகழ்வில் முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பிரதம அதிதி, அனுசரணையாளர்களான மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரவி ரத்னசிங்கம் மற்றும் பிரதிநிதிகள் புதிய வீட்டிற்கான திறப்பு பதாகையை திரைநீக்கம் செய்து, நாடா வெட்டியதுடன் பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினர்.

64 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நிஸ்ஸங்க ஏரியகம, 642 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் மெந்தக அல்விஸ், அனுசரணையாளர்கள், அரச அதிகாரிகள், பிரதேச அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.