Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2022 19:30:00 Hours

படையினரால் தீபாவளி தினத்தை முன்னிட்டு யாழ் இந்து கோவில் வளாகத்தில் சிரமதான பணி

மத உணர்வுகள் மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, இந்துக்களின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52 வது படைப்பிரிவின் படையினர் 2022 ஒக்டோபர் 22 முதல் 23 வரையான காலப்பகுதிகளில் ஐந்து இந்து கோவில்களில்‘சிரமதான’ திட்டங்களை முன்னெடுத்தனர்.

52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனுருத்த பெர்னாண்டோ அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமைவாக 52 வது படைப்பிரிவின் 521, 522 மற்றும் 523 வது பிரிகேட்களின் படையினர்கள் எழுதுமட்டுவாழ் அம்மன் கோவில், அச்சுவேலி உலவிகுளம் சித்திவிநாயகர் கோவில், நாவற்குழி ஸ்ரீ காளியம்மன் கோவில், தொண்டமான்னாறு செல்வ சாந்தி கோவில் ஆகிய கோவில் வளாகங்களை சுத்தம் செய்ததுடன், கொடிகாமம் பகுதியில் உள்ள வறிய பொதுமக்களுக்கு தீபாவளி தினத்தன்று (ஒக்டோபர் 24) இலவச உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.

521, 522 மற்றும் 523 வது பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி, 11 வது களப் பொறியியலாளர் படையணியின் படையினர், 11 வது விஜயபாகு காலாட் படையணியின் படையினர் மற்றும் 15 வது (தொ) கஜபா படையணியின் படையினர் சமூக நலன் சார்ந்த பணிகளை நல்ல நோக்கத்துடன் முன்னெடுத்தனர்.

அந்தந்த கோவில்களில் உள்ள தலைவர்கள் இத்திட்டங்களில் இணைந்து கொண்டதுடன், படையினரின் இந்த அர்ப்பணிப்புக்காக பாராட்டினர்.