Header

Sri Lanka Army

Defender of the Nation

10th November 2022 20:15:00 Hours

இராணுவ அதிகாரிகளின் பொறியியல் அறிவை மேம்படுத்த தனியார் நிறுவனம் உதவி

இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அழைப்பின் பேரில் லங்கா அசோக் லேலண்ட் கம்பனி தனியார் நிறுவனத்தினரால் 'வாகனப் பராமரிப்பு முகாமை மற்றும் நவீன போக்குகள்' என்ற தொனிப்பொருளின் கீழ் 20 அதிகாரிகளுக்கு பயிற்சி பட்டறை கடந்த நவம்பர் 3-4 ம் திகதிகளில் லங்கா அசோக் லேலண்ட் கம்பனி தனியார் நிறுவன வளாகத்தில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதியின் கருத்தியல் வழிகாட்டலுக்கமைய மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் ஜயசேகர அவர்களின் முன் முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட. இப் பயிற்சியில் நவீன தொழில்நுட்பம், வாகனங்களை முறையாகப் பராமரித்தல், உதிரி பாகங்களை பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல், எண்ணெய் சரிபார்தல், வாகன உதிரிபாகங்களை மாற்றுதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துதல் என்பன இந்த பயிலரங்கில், குறித்த நிறுவன பொறியியலாளர்களால் நடைமுறை பயிற்சிகளுடன் வெளிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் போது, அந்த இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் அதிகாரிகளுக்கு வாகனங்களின் ஆயுட்காலம் நீடிப்பது தொடர்பான வாகனங்களை பொருத்துதல், பிழையைக் கண்டறிதல், பிழைகளை தீர்ப்பது மற்றும் சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் தங்கள் அறிவை மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு உமேஷ் கௌதம், லங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏற்றுமதிப் பிரதிப் பொது முகாமையாளர் திரு விபின் ஓஹ்ரி மற்றும் லங்கா அசோக் லேலண்ட் பொது முகாமையாளர் திரு சுகத் வீரகோன் ஆகியோர் இந்த இரண்டு நாள் செயலமர்வில் கலந்து கொண்டனர்.