Header

Sri Lanka Army

Defender of the Nation

07th November 2022 05:30:48 Hours

52 வது படைப்பிரிவின் ஒழுங்கமைப்பில் கரப்பந்துப் போட்டி

பாதுகாப்புப் படையினர் மற்றும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு இடையிலான நல்லுறவு மற்றும் ஒத்துழைபை வெளிப்படுத்தும் வகையில் 'கச்சை கிங்ஸ்' மற்றும் 'மீசாலை ஐங்கரன்' அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ கரப்பந்தாட்டப் போட்டியானது, யாழ். மிருசுவில் 52 வது படைப்பிரிவு கரப்பந்தாட்ட மைதானத்தில் சனிக்கிழமை (5) இடம்பெற்றது.

'மீசாலை ஐங்கரன்' கரப்பந்தாட்ட அணி, 'கச்சை கிங்ஸ்' கரப்பந்து அணியை கடும் மோதலுக்குப் பிறகு வீழ்த்தி சம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளுக்கும் கிண்ணங்களும், பணப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

52 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விளையாட்டு மற்றும் நல்லெண்ணத்தை மேம்படுத்தும் முயற்சியாக 52 வது படைப்பிரிவின் தலைமையகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் இணைந்து இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இப்போட்டியை நேரில் பார்வையிட்டார்.

கரப்பந்து போட்டியை 52 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் ஈ.டி.எம் ஜெயகாந்த அவர்கள் ஒருங்கிணைத்தார்.

மாவட்ட மேலதிக செயலாளர் திரு.எம்.பிரதீபன், சாவகச்சேரி உதவி பொலிஸ் அத்தியட்சகர் திரு.ஜருல் முகம்மது, 52 வது படைப்பிரிவின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள், கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதேச கிராம உத்தியோகத்தர்கள், இளம் கரப்பந்து ஆர்வலர்கள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.